நயன்தாராவின் வாடகைத்தாய் இவரா..? ஷகிலா முன்பு உண்மையை சொன்ன பெண்மணி..!!
Author: Vignesh22 April 2023, 7:45 pm
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி, இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகி உள்ளனர். இந்த செய்தியை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
அதில், “நயனும் நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. முன்னோர்களின் ஆசீர்வாதங்களும், பிரார்த்தனைகளும் ஒருங்கிணைந்து இரட்டை குழந்தைகளின் வடிவத்தில் எங்களுக்கு கிடைத்துள்ளன. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எங்களுக்கு வேண்டும். உயிர் மற்றும் உலகம்.” என பதிவிடப்பட்டிருந்தது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், சேர்ந்தும் வாழ்ந்து வந்தனர். இதனிடையே, கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி அன்று இருவருக்கும் சென்னை அருகே திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரானதாக அந்த தம்பதி பதிவிட்டுள்ளனர். அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
அதேசமயம், திருமணமாகி எப்படி வெறும் நான்கு மாதங்களில் எப்படி குழந்தை பிறக்கும்? வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெற்றனரா? அல்லது தத்து எடுத்துக் கொண்டனரா? என பலரும் கேள்வி எழுப்பினர்.
வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்வதற்கு சில விதிமுறைகள் இருப்பதாகவும், அதனை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி மீறியிருப்பதாகவும் சிலர் குற்றம் சாட்டினர்.
6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்ததற்கும், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத் தாய் முறையில் ஒப்பந்தம் பதிவு செய்ததற்கான ஆதாரங்களை அவர்கள் சமர்ப்பித்து உள்ளனர்.
இதன் மூலம் வாடகைத் தாய் விவகாரத்திற்கு நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி முற்றுப்புள்ளி வைத்தனர்.
இந்நிலையில் நயன் தாரா – விக்னேஷ் சிவனுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த வாடகைத்தாய் இவர் தான் என்று புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
இதனிடையே, திருமணத்திற்கு முன் நயன்தாரா – விக்னேஷ் சிவன் காலிகாம்பால் கோவிலுக்கு சென்று அங்கு சில புகைப்படங்களை ஒருசிலரோடு எடுத்துக்கொண்டனர். வைரலான புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி தான் வாடகைத்தாய் என்று கூறப்பட்டு செய்திகள் கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை ஷகீலா யூடியூப் சேனலுக்கு அந்த பெண்மணி பேட்டிக்கொடுத்து உண்மையை தெரிவித்து இருக்கிறார்.
விஷ்ணு இவரை தனக்கு பல வருடங்களாக இவரை தெரியும் என்று ஷகீலா அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய விஷ்ணு, விக்னேஷ் சிவனின் அம்மா தனக்கு பல வருடங்களாக தெரியும் என்றும், தன் மகள் விக்னேஷ் சிவன் அம்மாவை ’அம்மம்மா’ என்று தான் கூப்பிடுவாள் எனவும், அந்தளவிற்கு அவரது குடும்ப நண்பர்களாக இருந்து வந்தேன் எனவும், வாரம் வாரம் பேரிஸில் இருக்கும் காலிகாம்பால் கோவிக்கு செல்வது வழக்கம் எனவும்,
அப்போது தானும் அங்கு சென்றதால் விக்கேஷ் சிவன் – நயன் தாரா வந்திருப்பதை தெரிந்து அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதை அனைவரும், யார் என்ன என்று தெரியாமல், தான் தான் வாடகைத்தாய், நயன் தாராவுக்கு கருமுட்டை கொடுத்தேன் என்று செய்திகளை போட்டுவிட்டார்கள் என தெரிவித்தார்.
தன் பிஞ்சி குழந்தையே தன்னிடம் நீதான் நயன் தாராவுக்கு வாடகைத்தாய்-ஆ என்று கேட்டால் எனவும், ஆனால் அவர்களுக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை, தான் வாடகைத்தாய் கிடையாது என்று விஷ்ணு தெரிவித்ததாக கூறினார்.
இதனிடையே, விக்னேஷ் சிவன் அம்மாவிடம் எப்பவும் பேசி வருகிறேன், அவரே இதுபற்றி எதாவது பிரச்ச்னை வந்தால் தான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியதாக ஷகீலா மூலம் இதற்கு விஷ்ணு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.