சுத்தி சுத்தி அடிக்கும் கெட்ட நேரம்.. ஜோசியர் அட்வைஸில் நயன்-விக்கி எடுத்த அதிரடி முடிவு..!

Author: Vignesh
17 February 2023, 1:45 pm

நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதனிடையே, தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார்.

nayanthara _updatenews360

விக்னேஷ் சிவன், நயன்தார தம்பதிக்கு ரசிகர்கள், மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இதனிடையே பலர் திருமணம் ஆகி 4 மாதங்களே ஆன நிலையில் இருவரும் பெற்றோர் ஆனது எப்படி என மறைமுகமாக தாக்கினர்.

இரட்டை குழந்தைகள் சர்ச்சை சற்று ஓய்ந்த நிலையில், விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து AK62 படம் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு, திடீரென ஏகே 62ல் விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டார். இதற்கு நயன்தாரா தான் காரணம் என கூறப்பட்டது.

nayanthara-----updatenews360

அடுத்தப்படியாக நயன்தாரா திருமணத்திற்கு பின்பு வெளிவந்த அனைத்து படங்களும் தோல்வியை சந்தித்தால், நயன்-விக்கி ஜோடிகள் ஜோசியரிடம் சென்று பரிகாரம் கேட்டதாக தகவல் வெளியானது.

nayanthara_updatenews360

அந்த ஜோசியர் பிரச்சனைகளுக்கு காரணம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தவறான நேரத்தில் திருமணம் செய்து கொண்டது தான் என்று சொன்னாராம். இதனால் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மீண்டும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகிவுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!