கூடவே ஒட்டிட்டு வராதே : கேசட்டால் நயன்தாரா – விக்கி எடுத்த முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan8 March 2025, 4:59 pm
நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி வாடகைத்தாய் மூலம் இரட்டை மகன்களை பெற்றனர்.
இந்த நிலையில் சிவனேனு இருந்த என்னை சீண்டிவிட்டாய் என்பது போல, நயன்தாராவுடன் எப்போதும் வலம் வரும் விக்கி தற்போது விலகியுள்ளார்.
இதையும் படியுங்க: தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரம் நமக்கு எதுக்கு? ஸ்மார்ட்டாக சொன்ன சிவகார்த்திகேயன்!
எந்த நிகழ்ச்சி என்றாலும், படப்பிடிப்பு என்றாலும் நய்னதாராவுடன் அடிக்கடி உடன் வருவார் விக்னேஷ் சிவன்.
ஆனால் அவர் உடன் வருவதால் நெகட்டிவ் விமர்சனம் நயன்தாரா மீது விழுவதாக பரவலாக பேச்சு உள்ளது. இதனால் விக்கி தற்போது நயன்தாராவுடன் வலம் வருவதை தவிர்த்துள்ளார்.
சமீபத்தில் மூக்குத்தி அம்மன் 2 பட நிகழ்ச்சியில் கூட நயன்தாரா சோலோவாகத்தான் வந்தார். எல்லாம் ஓடிடியில் வெளியான திருமண வீடியோ தான் காரணம் என விக்கியும் கப்சிப் என்று இருந்துவருகிறாராம்.