வாடகைத்தாய் மூலம் குழந்தை: நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியை வம்பிலுக்கும் பிரபல நடிகை..!

Author: Vignesh
10 October 2022, 2:10 pm

நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நயன்தாராவும் நானும் அம்மா , அப்பாவாகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து, எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

nayanthara _updatenews360

உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும் என தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன், நயன்தார தம்பதிக்கு ரசிகர்கள், மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், நடிகை கஸ்தூரி வாழ்த்து ஏதும் தெரிவிக்காமல் மறைமுகமாக தாக்கியபடி போட்டுள்ள ட்வீட் சமூகவலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

kasthuri tweet_updatenews360

அதாவது, 2022 ஜனவரி முதல் வாடகைத்தாய் முலம் குழந்தைபெற்றுக்கொள்ள இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உடல் ரீதியாக முடியாதவர்களுக்கு மட்டும் அதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கஸ்தூரி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

kasthuri _updatenews360

இன்னும் வரும் நாட்களில் ஏகப்பட்ட விஷயங்கள் வெளியே வரும் என கஸ்தூரி போட்ட ட்வீட்டை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் கடுப்பாகி கஸ்தூரியை கலாய்த்துத் தள்ளி வருகின்றனர். மேலும், சிலர் உங்களுக்கு இது தேவையில்லாத வேலை என்று சாடிவருகின்றனர்.

kasthuri tweet_updatenews360

பிரியங்கா சோப்ரா பெற்றாரே பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றாரே என ரசிகர்கள் சிலர் கமெண்ட் போட, அது 2022க்கு முன்பாக இப்போ எப்படி? என்கிற கேள்வியையும் கஸ்தூரி முன் வைக்க, நயன்தாரா ரசிகர்கள் வரிந்து கட்டி அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர். மேலும் அடுத்தவர் பர்சனல் விஷயத்தில் மூக்கை நுழைப்பதே உங்களுக்கு வேலையா என மீண்டும் ரசிகர்கள் கஸ்தூரியை விளாசி வருகின்றனர்.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 598

    0

    0