இனி வாழ்க்கையில் அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன்.. உச்சக்கட்ட கோபத்தில் சபதம் எடுத்துள்ள நயன்..!

Author: Vignesh
7 February 2023, 10:30 am

நடிகர் அஜித்தின் துணிவு படம் பொங்கலுக்கு ரிலீசாகி மெகா ஹிட் அடித்துள்ளது. அஜித் பட வரிசையில் இது நல்ல வசூலை பெற்று தந்துள்ளது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குகிறார் என்ற அறிவிப்பு முன்கூட்டியே வெளியாகியிருந்தது. விக்னேஷ் சிவன் தான் இயக்கப்போவதாக கூறப்பட்ட நிலையில், அது உறுதியாகாமல் உள்ளது.

Ajith Wikki - Updatenews360

விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு எளிதாக அமைந்தாலும், கடந்த வாரம் அஜித் தன் அடுத்த படத்தின் இயக்குனரை மாற்றிவிட்டார். இது விக்னேஷ் சிவனுக்கு கடும் மன உளைச்சல் கொடுத்தாலும், அவரின் நடத்தை தான் இதற்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.

கடந்த வருடம் நயன்தாராவுடன் திருமணம், இரட்டை குழந்தைகளுக்கு தந்தை என ஏகப்பட்ட குஷியில் இருந்து விக்னேஷ் சிவனுக்கு இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து கஷ்ட காலம்தான் போல என புலம்பி வருகிறார்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து வருகிறார். இவர் நடிப்பில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் என்ற படம் வரவுள்ளது.

nayanthara- updatenews360.jpg 2

இந்நிலையில் நயன்தாரா தற்போது அஜித் மீது உச்சக்கட்ட கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதற்கு என்றால் சொல்லவா வேண்டும் தன் கணவரை படத்திலிருந்து தூக்கி எறிந்ததால் தான் என்றும், இனி வாழ்க்கையில் அஜித் உடன் நடிக்க மாட்டேன் என சபதமே எடுத்துவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

என்னமோ இனி அஜித்- நயன்தாரா கூட்டணி அமையாது என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 643

    0

    1