எட்டி மிதித்த நபர்.. கோபத்தின் உச்சிக்கே சென்ற நயன்தாரா.. வைரலாகும் வீடியோ!!!

Author: Vignesh
30 September 2023, 4:45 pm

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

இப்படியான நேரத்தில் நயன்தாரா புதிய பிசினஸ் ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஆம், அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அவர், இன்று, ஆறு வருட அயராத முயற்சியையும் அன்பையும் வெளிப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை மற்றும் நவீன அறிவியலால் ஆதரிக்கப்படும் சூத்திரங்களுடன், உங்களைப் போலவே தனித்துவமான தயாரிப்புகளைக் குணப்படுத்துவதில் நாங்கள் எங்கள் இதயங்களைச் செலுத்தியுள்ளோம்.

மேலும் உங்கள் சுய பாதுகாப்பு வழக்கத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சுய காதல் பயணத்தில் எங்களுடன் இணைந்து ஆரோக்கியமான, ஒளிரும் சருமத்திற்கு வணக்கம் சொல்லுங்கள்! நாங்கள் @9SKINOfficial ஐ அறிமுகப்படுத்துகிறோம். நீங்கள் தகுதியான சுய அன்பின் உழைப்பு இப்போது கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஏனென்றால் சுய அன்பு மட்டுமே நமக்குத் தேவை என்று நாங்கள் நம்புகிறோம்.

9SKIN பயணம் செப்டம்பர் 29, 2023 அன்று தொடங்குகிறது. அற்புதமான தோல் பராமரிப்பு அனுபவத்திற்கு தயாராகுங்கள்! என கூறி அதை விளம்பர படுத்துவதற்காக கிளாமரான போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில் தற்போது படு கிளாமரான உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.

இதனிடையே, அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தின் தொடக்க விழாவில் பங்கேற்க நயன்தாரா நீளமான உடை அணிந்து வந்திருந்தார். நயன்தாரா நடந்து வந்து கொண்டிருந்தபோது, பின்னால் ஒரு நபர் அவருடைய உடையை மிதித்து விடுகிறார். இதனால் கோபமடைந்த நயன்தாரா அந்த நபரை முறைத்து பார்த்துவிட்டு சென்றார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் படுவைரலாகி வருகிறது.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 453

    0

    0