விஜய்க்கு ஒர்க் அவுட் ஆனது நயனுக்கு எடுபடல.. லேடி சூப்பர் ஸ்டாரை கண்டுகொள்ளாத திரையுலகம்..!

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா.

சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்துள்ள அன்னபூரணி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .

இந்நிலையில், அன்னபூரணி படத்தில் இந்துமத நம்பிக்கைகளை தவறாக காட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கும் வரை அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸில் இடம்பெறாது என நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் நயன்தாரா மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறாராம். இதனிடையே, ஜெய் ஸ்ரீ ராம் என குறிப்பிட்டு நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு மன்னிப்பும் கேட்டு இருந்தார்.

இதன் மூலம் ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் முடிவு வந்தது. இதில், நயன்தாராவிற்கு இயக்குனர் வெற்றிமாறன் மட்டுமே ஆதரவாக துணை நின்றார். சென்சார் செய்யப்பட்ட திரைப்படத்திற்கு ஓடிடி நிறுவனம் இப்படி செய்திருக்கக் கூடாது. அது தவறு எனவும் கூறியிருந்தார். அதேபோல், நயன்தாராவின் ரசிகர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

மற்றபடி திரையுலகை சேர்ந்த யாரும் நயன்தாராவிற்கு இந்த சம்பவத்திற்கும் துணை நிற்கவில்லை என்பது சோகமான விஷயம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெர்சல் இப்படத்தில், ஜிஎஸ்டி குறித்தும் கோவில்களுக்கு பதிலாக மருத்துவமனை கட்டலாம் என விஜய் வசனம் பேசி இருந்தார். இதற்கு வடக்கில் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

அந்த நேரத்தில், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். ஆனால், தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவிற்கு யாருமே ஆதரவு தெரிவிக்கவில்லை. நடிகருக்கு துணை நின்றவர்கள், நடிகைக்கு துணை நிற்கவில்லை பிரிவினை பார்க்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்ப துவங்கி விட்டனர்.

Poorni

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

8 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

9 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

10 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

10 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

10 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

11 hours ago

This website uses cookies.