ஷாருக்கானுக்கே விபூதி அடித்த நயன்தாரா.. நொந்து கொண்ட அட்லீ..!

Author: Vignesh
31 August 2023, 1:07 pm

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்திருக்கும் நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் முதன் முறையாக அறிமுகமாகவிருக்கிறார். இதன் மூலம் அவருக்கு பாலிவுட்டில் ஒரு நல்ல ஸ்கோப் கிடைக்கும் எதிர்பார்க்கலாம். இது பாலிவுட்டின் அறிமுக படம் என்பதால் அவர்கள் கேட்கும்படியெல்லாம் நடித்து கொடுக்கிறாராம்.

nayanthara

குறிப்பாக ரொமான்ஸில் தாராளம் காட்டி நடித்துள்ளார். ஓவர், நெருக்கம் , எல்லை மீறிய ரொமான்ஸ் என ஜவான் படத்தில் ஷாருக்கான் உடன் நடித்துள்ள பாடல் ஒன்று வெளியாகி செம ஷாக் கொடுத்தது. இதுவரை தமிழ் ஹீரோக்களுடன் கூட அப்படி ஒரு நெருக்கம் காட்டவில்லை என்றால் பாருங்க. எல்லாத்துக்கும் காரணம் பாலிவுட்டில் மார்க்கெட் பிடிக்க தானாம். இதனால் கோலிவுட் ரசிகர்கள் செம கடுப்பாகியுள்ளாராம். அஜித், விஜய், ரஜினிக்கெல்லாம் கண்டீஷன் போட்டு நடித்த நயன்தாரா ஷாருக்கான் உடன் படுநெருக்கமாக நடித்திருப்பது நல்லதல்ல என கொந்தளித்துள்ளனர்.

ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ஷாருக்கான், அட்லி, அனிருத், விஜய் சேதுபதி, யோகி பாபு என பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால், அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நடிகை நயன்தாரா மட்டும் நிகழ்ச்சிக்கு வரவில்லை. பொதுவாக தன்னுடைய தயாரிக்கும் படத்தின் நிகழ்ச்சி மற்றும் பேட்டிகளில் கலந்து கொள்ளும் கொள்கையில், இருந்து வந்தார் நயன்தாரா. ஆனால், நயன்தாரா நிகழ்ச்சிக்கு வராமல் கேரளாவில் இருக்கும் தன் இரு குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டுள்ளார். ஓணம் பண்டிகை என்பதால், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியின் குடும்பத்துடன் குழந்தைகளுடன் செலவிட்டு வருகிறார் நயன்தாரா.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 517

    0

    1