இது என்னடா விக்கிக்கு வந்த சோதனை.. குழந்தையின் தாய் எங்கே?.. நயன்தாராவை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
31 August 2023, 5:30 pm

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார். தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார்.

இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

ஆனாலும், முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது முதன்முறையாக தனது மகன்களின் முகத்தை உலகிற்கு காட்டியுள்ளார். இரட்டை குழந்தைகளுக்கு கூலிங் க்ளாஸ் போட்டு மாஸ் என்ட்ரி கொடுத்த வீடியோவை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு ” நான் வந்துட்டேனு சொல்லு” என கேப்ஷன் கொடுத்து” அலப்பறை கெளப்பியுள்ளார். நயன்தாராவின் மகன்களை முதன்முறையாக பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் போட்டு கமெண்ட்ஸ் குவித்துள்ளனர்.

இந்நிலையில், நயன்தாரா தன்னுடைய குழந்தைகளுக்கு மருந்து கொடுத்து வளர்ச்சியை அதிகரித்திருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது நெட்டிஷன்கள் குழந்தையின் தாய் எங்கே என கேள்வி எழுப்பி விக்கி மற்றும் நயன்தாராவை கடுப்பேற்றி வருகின்றனர்.

nayanthara - updatenews360.jpg 2
  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!