விக்னேஷ் சிவனுடன் காதல் – கல்யாணம்:
நடிகை நயன்தாரா நானும் ரௌடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். வாடகை தாய் முறையில் இவர்கள் குழந்தை பெற்றெடுத்தார்கள்.
நயன்தாரா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து நம்பர் 1 நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி தனது இரட்டை மகன்களுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடி அழகான புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
Happy children’s day கொண்டாட்டம்:
விக்னேஷ் சிவன் மற்றும் இரண்டு மகன்கள் பட்டு வேட்டி சட்டை அணிந்துக்கொண்டும் நயன்தாரா கண்களை கவரும் பச்சை கலர் சேலை அணிந்துக்கொண்டு போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தீயாய் பரவி வருகிறது .
மேலும் இந்த புகைப்படங்கள் பார்க்கவே அவ்வளவு அழகாக இருப்பதாகவும் இந்த க்யூட்டான குடும்பத்திற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருவதோடு கண் திருஷ்டி பட்டுவிடப் போது சுத்தி போடுங்கள் என நயன்தாராவிடம் கூறி வருகிறார்கள். இணையத்தில் தற்போது இந்த அழகிய புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.