இத்தனை வருட பழக்கத்தை குழந்தைகளுக்காக கை விட்ட நயன்..! பர்த்டே பிளானை டோட்டலாக மாற்றிய லேடி சூப்பர் ஸ்டாருக்கு குவியும் வாழ்த்துகள்..!

Author: Vignesh
18 November 2022, 7:45 pm

நடிகை நயன்தாரா, இந்த வருடம் தன்னுடைய பிறந்தநாள் பிளானை குழந்தைகளுக்காக மாற்றி கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா இன்று தன்னுடைய 38வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளம் மூலமாக இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

naynathara - updatenews360

மேலும் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடித்துள்ள ‘கன்னெட்’ படத்தின் டீசர் வெளியாக உள்ளது. திருமணத்திற்கு பின் முதல் முறையாக கணவர் மற்றும் குழந்தையோடு இந்த பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, நயன்தாரா இத்தனை வருடங்கள் கடைபிடித்து வந்த பழக்கத்தை கூட விட்டு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

naynathara - updatenews360

நயன்தாரா கடந்த ஏழு வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த போது கூட, தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் எந்த ஒரு ஷூட்டிங் பணிகள் இருந்தாலும், அதனை தவிர்த்து விட்டு காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டுக்கு சென்று, டேட்டிங் செய்து கொண்டே பிறந்தநாளை கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

naynathara - updatenews360

அதாவது திரையுலகில் அவர் நிலையான இடத்தை பிடித்ததில் இருந்து, இந்த பழக்கத்தை கடைபிடித்து வருகிறார். ஆனால் இந்த ஆண்டு… தன்னுடைய குழந்தைகளுக்காக இந்த வழக்கத்தை மாற்றி கொண்டுள்ளார்.

நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்து, 6 மாதம் கூட ஆகாத நிலையில், குழந்தைகளை அழைத்து கொண்டு வெளிநாட்டுக்கு செல்வது என்பது, மிகவும் கஷ்டம். எனவே இந்த முறை பல ஆண்டுகள் கடைபிடித்து வந்த பழக்கத்தை கைவிட்டு விட்டு, தன்னுடைய குழந்தைகளுக்காக சென்னையிலேயே பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்துள்ளாராம்.

naynathara - updatenews360

இவருடைய பிறந்தநாள் பார்ட்டி மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள், மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் எடுத்து கொண்ட சில ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

naynathara - updatenews360
  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 429

    0

    0