லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்னதாக மலையாளத்தை சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

முன்னதாக இவர் கேரள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு நடிகையாக இன்று முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, தமிழ் , மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.
இதையும் படியுங்கள்: நடிகர் பிரசன்னாவா இது? வயதான லுக்கில் ஆளு டோட்டலா மாறிட்டாரே!

தற்போது நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் , மூக்குத்தி அம்மன் 2 , ஊர் குருவி, மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதனிடையே நடிகை நயன்தாரா கணவர் மற்றும் குழந்தைகளுடன் அவ்வப்போது அவுட்டிங் செல்லும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரலாகும்.
அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாரா வெளிநாட்டிற்கு சென்று அங்கு சன்செட் ரசித்தவாறு எடுக்கப்பட்ட வீடியோ ஒரு இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதில் தன்னுடைய அன்பு மகனை மடியில் சாய்த்துக்கொண்டு கவலை மறந்து நயன்தாரா உறக்கம் கொண்டிருக்கும் இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.