இரட்டை குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு… புகைப்படத்தை வெளியிட்ட விக்கி – நயன் ஜோடி..!
Author: Vignesh26 December 2022, 2:00 pm
நடிகை நயன்தாரா தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
நடிகை நயன்தாரா தொகுப்பாளினியாக டயானா என்ற பெயரில் ஆரம்பித்து மலையாள படத்தில் கதாநாயகியாக என்ற பெயருக்கு மாறினார்.
அதன்பின் தமிழில் ஐய்யா, சந்திரமுகி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

இப்படத்தினை தொடர்ந்து அழகில் முன்னணி நடிகைகளை ஓரங்கட்டி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் நடிகை நயன்தாரா . அத்தோடு சிம்பு, பிரபு தேவா உடனான காதலுக்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்டு உச்சத்தை சினிமாவில் உழைப்பை போட்டு வந்தார் நடிகை நயன்தாரா .

அதன்பின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுக்கும் அளவிற்கு நயன் தாராவின் மார்க்கெட்டும் அழகும் எகிறியது. இந்திய சினிமா ரசிகர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு தற்போது பாலிவுட் படம் வரை சென்றுள்ளார்.

இதற்கிடையில் நயன்தாரா சில மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாகவும் அறிவித்தது பல கேள்விகளை எழுப்பியது. பின்னர் அந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்தது கடும் சர்ச்சையானது. பின்னர் அதுவும் ஓய்ந்தது.
தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த மாதம் தான் தனது 38வது பிறந்தநாளை நயன்தாரா கொண்டாடி இருந்தார்.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்களது மகன்களுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடமிட்டு அவர்களுடன் மகிழ்ச்சி பொங்க எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருவரும் ஜோடியாக கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.