விக்னேஷ் சிவனுக்காக இறங்கி வந்த நயன்தாரா.. எல்லாம் காதல் செய்யும் மாயம்..!

Author: Rajesh
6 April 2022, 1:01 pm

தமிழ் திரையுலகில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்துள்ளனர். இதனிடையே, விக்னேஷ் சிவன், இயக்கவுள்ள நடிகர் அஜித்தின் 62வது படத்திலும் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.

தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படமான லயன் படத்திலும் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் இப்படத்திற்காக நயன்தாரா மும்பை செல்ல இருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஃபிலிம் சிட்டி ஸ்டூடியோவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களின் திருமண தேதி எப்போது வெளியாகும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து காத்துள்ளனர். சமீபகாலமாக பல்வேறு கோவில்களுக்கு சென்று இருவரும் இணைந்து சென்று வழிபாடுகளும் நடத்தி வருகின்றனர்.

இதனால் விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் எனவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும், திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைக்க வேண்டும் என நயன்தாராவிடம், விக்னேஷ் சிவன் நீண்ட காலமாக வைத்திருந்த கோரிக்கைகளில் ஒன்று என கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்து கொள்ளவும் நயன்தாரா முடிவு செய்துள்ளாராம். தனது காதலரான விக்னேஷ் சிவனின் வளர்ச்சியில் மட்டும் இனிமேல் பெரிதும் கவனம் செலுத்த உள்ளாராம்.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 1325

    0

    0