விக்னேஷ் சிவனை திருமணம் பண்ணது தப்பு : மனம் திறந்து பேசிய நயன்தாரா…காரணம் இதுதான்..!
Author: Selvan17 December 2024, 2:07 pm
விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் நான் குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன்
நடிகை நயன்தாரா பல வித சர்ச்சைகளுக்கு மத்தியில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு உயிர்,உலக் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
சமீபத்தில் இவர்களுடைய திருமண வீடியோ வெளியாகி,அதை பலரும் விவாதித்து வந்தனர்.இப்பிடி இருக்கும் தருணத்தில் விக்னேஷ் சிவனை குறித்து நயன்தாரா பேசிய வீடியோ தற்போது அனைவரையும் ஈர்த்துள்ளது.
அதில் “நானும் விக்னேஷ் சிவனும் சேராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவ்வப்போது நினைத்ததுண்டு,” என்று கூறியுள்ளார் . மேலும் அவர் இப்போது எனக்கு குற்ற உணர்ச்சியே இருக்கிறது. அவரை இந்த உறவுக்குள் இழுத்தது நான்தான். அவரின் வாழ்க்கையில் நான் இல்லாமல் இருந்திருந்தால், அவருக்கென தனி பெயர், தனி அடையாளம் இருந்திருக்கும். இயக்குநர், பாடலாசிரியர் என பல துறைகளில் விக்னேஷ் சிவன் தனக்கென தனி முத்திரை பதித்திருப்பார்.
இதையும் படியுங்க: அடுத்தடுத்து விலகிய நடிகர்கள்…எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த மிகப்பெரிய சிக்கல்…!
ஆனால் என்னுடன் இணைந்ததன் மூலம் அவர் அடைந்த சில குறைகளும் நான் உணர்ந்திருக்கிறேன், என்றார்.
விக்னேஷ் சிவன் ரொம்ப நல்ல மனிதர். அவரைப் போல் ஒருவர் இருக்க முடியுமா என்று கேட்டால், அது எனக்குத் தெரியாது. ஆனால், ஒருவர் மீது இருக்கும் அன்பும், மரியாதையும் சில நேரங்களில் எதிர்மறையான கருத்துக்களால் மங்கிவிடுகிறது எனவும்,அவர் என்னை திருமணம் பண்ணியது என்னுடைய ஆடம்பரத்தையோ வெற்றியோ பார்த்து இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,அவரும் நானும் ஒருவரையொருவர் புரிந்து தான் திருமணம் செய்துகொண்டோம்.வேறு எதையாவுது ஒப்பிட்டு சிலர் பேசுவதில் நியாயமில்லை என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.