எனக்கு அப்பா என்றால் அது சத்யராஜ் தான்… எனக்கு எல்லாமே கொடுத்தது – நயன்தாரா கண்ணீர் பேட்டி!

Author: Rajesh
8 December 2023, 7:16 pm

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக்கொண்டிருக்கும் நயன்தாரா தற்ப்போது ” அன்னபூரணி ” என்ற படத்தில் நடித்துள்ளார். ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகி இயக்கியுள்ள படம், ‘அன்னபூரணி’.

இப்படத்தில் நயன்தாரா தனது கனவு லட்சியமான “செஃப் ” ஆசையை பல தடைகளை தகர்த்தெறிந்து ஜெயித்து காட்டுகிறார். இதில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு, கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ள தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கடந்த சில நாட்களாக இப்படத்தின் ப்ரோமோஷன்களில் நயன்தாரா படு பிசியாக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட தன் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தினார். இந்நிலையில் தற்போது ஜெய் உடன் இணைந்து பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்டார்.

அப்போது பேசிய நயன்தாரா ” சினிமா தான் எனக்கு எல்லாமே… சினிமாதான் தன்னுடைய வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்தது. அதிகப்படியான பெயர், பணம், மரியாதை இதெல்லாம் கிடைத்தது இங்கு தான். மேலும், சினிமாவில் எனக்கு அப்பா என்றால் அது சத்யராஜ் தான் என்று நெகிழ்ச்சியோடு கூறி கலங்கினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!