மகன்களுக்கு அன்னப்பிராசனம் செய்த நயன்தாரா – கிடுகிடுன்னு வளர்ந்துட்டாங்களேப்பா!
Author: Shree27 August 2023, 1:09 pm
தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.
முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.
தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.
அதன் பின்னர் தான் தற்போது ஜவான் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படம் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். இதன் மூலம் அவருக்கு பாலிவுட்டில் ஒரு நல்ல ஸ்கோப் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
இந்த நேரத்தில் தனது மகன்களுக்கு அன்னப்பிராசனம் விழா நடத்தி அழகு பார்த்துள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா மகன்களா இது? பார்த்த சீக்கிரத்தில் இப்படி வளர்ந்திட்டாங்களே என வியந்து கூறி வருகின்றனர்.