அதென்ன ஓரவஞ்சனை.. மலையாள படத்திற்கு மட்டும் சலுகை? நயன்தாராவுக்கு எப்படி மனசு வந்துச்சு..!

Author: Vignesh
7 August 2024, 3:46 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நயன்தாரா ஒரு படத்தில் நடிப்பதற்கு 10 கோடி முதல் 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், மலையாள திரைப்படங்களில் நடிக்க மட்டும் மிகவும் குறைவான சம்பளம் தான் வாங்கி வருகிறாராம்.

அதாவது, தமிழில் 10 கோடியில் இருந்து 12 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா இதிலிருந்து பாதி அளவு தான் மலையாள படங்களில் நடிக்க நயன்தாரா சம்பளமாக வாங்கி வருகிறார் என மூத்த பத்திரிகையாளர் அந்த அண்ணன் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய சொந்த மொழியான மலையாளத்தில் நடிக்க கம்மி சம்பளம் வாங்கி வருவதாகவும், தமிழில் நடிக்க மட்டும் அதிக சம்பளம் வாங்கி வருவதாகவும், அந்தணன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்ததை கேள்விப்பட்ட நெட்டிஷன்கள் பலரும் மலையாள சினிமாவிற்கு மட்டும் இப்படி ஒரு சலுகை தமிழ் சினிமாவிற்கு மட்டும் ஓரவஞ்சனை நயன்தாரா செய்து வருவதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!