“லேடி சூப்பர் ஸ்டார்” பட்டத்தை பிடிங்கப்போகும் கோலிவுட்? பிரபல நடிகையால் நயன்தாராவுக்கு வந்த சோதனை!
Author: Shree11 April 2023, 6:50 pm
மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், கான் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.
பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
பின்னர் வடை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. இதனிடையே நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருமே வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களையும், தொழில் ரீதியான சறுக்கல்களையும் சந்தித்து வருகிறார்கள். இதனால் கோவில் , பரிகாரம் என செய்து வருகிறார்கள்.
மேலும், நயன்தாரா புதிதாக கமிட்டாகியுள்ள படங்களில் இருந்து கூட நீக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது நயன்தாரா நடிக்க இருந்த புதிய படமொன்று காரணமே இல்லாமல் கை நழுவி சென்றுள்ளது. ஒய் நாட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சசி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள படத்தில் நயன்தாரா முதலில் கமிட் செய்யப்பட்டுள்ளார். ஆனால், சில காரணங்களால் அவர் திடீரென நீக்கப்பட்டு ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் இந்த படத்தில் சித்தார்த், மாதவன் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.
கொஞ்சம் கொஞ்சம் நயன்தாரா மார்க்கெட் குறைய அவரது இடத்தை வேறு சில ஆக்கிரமித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக த்ரிஷாவை சொல்லலாம். அவர் தான் தற்போதைய நடிகையாக மார்க்கெட் உச்சத்தில் இருந்து வருகிறார். இப்படியே போனால் நயன்தாராவின் “லேடி சூப்பர் ஸ்டார்” பட்டத்தை கூட வேறு ஒரு நடிகைக்கு பிடிங்கி கொடுத்தாலும் கொடுத்துவிடுவார்கள் என்கிறார்கள் நயன் ஃபேன்ஸ். பாவம் தலைவி நிலைமை இப்படி ஆகிப்போச்சே..!