எல்லாத்தையும் விட்டுவிட்டு கேரளாவுக்கே போய்டலாமா? மனம் நொந்துப்போன நயன்தாராவுக்கு மண்ணாங்கட்டி கொடுத்த வாழ்க்கை!

Author: Shree
29 June 2023, 6:07 pm

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார். முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

nayanthara- updatenews360.jpg 2

கணவர் விக்னேஷ் சிவனுக்கும் அஜித் படம் இயக்க வாய்ப்பு கிடைத்து பின்னர் அது பறிபோனது. அது பெரிய அடியாக விழ இருவருமே கோலிவுட்டில் மார்க்கெட் இழக்க ஆரம்பித்தனர். இதனிடையே தயாரிப்பு தொழிலில் இறங்கிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கனெக்ட் படத்தை தயாரித்தார்கள் அது பெரும் தோல்வியை சந்தித்து நட்டத்தை ஈடு செய்யமுடியாத அளவிற்கு தள்ளப்பட்டார்கள். எடுத்த காரியம் எதுவுமே சரிப்பட்டு வராததால் குழந்தை குட்டிகளோடு அமைதியான, சாதாரணமான வாழ்க்கையை வாழலாம் சினிமா தொழில் போதும் என்ற முடிவுக்கு வந்தாராம் நயன்.

அந்த சமயத்தில் தான் இது ஒரு முறை முயற்சித்து பார்த்திடலாம் என விக்னேஷ் சிவன் சொல்ல நயன் மீண்டும் படத்தில் நடிக்க இறங்கியுளளார். ஆம், அதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டராம். இந்த படத்திற்கு மண்ணாங்கட்டி என பெயரிடப்பட்டிருக்கிறதாம். பிளாக் ஷீப் யூடியூப் சேனலில் பணிபுரியும் ஒருவர் படத்தை இயக்குகிறாராம். படத்திற்கு பூஜையும் போடப்பட்டு விட்டது. ஷூட்டிங் தான் ஆரம்பிக்க வேண்டும். திருமணம் ஆனதில் இருந்து தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் நயன்தாரா மண்ணகக்கட்டி படத்தை தான் பெரிதும் நம்பியிருக்கிறாராம். நயன்தாராவுக்கு women oriented திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து கைகொடுக்கும் என்பதால் மண்ணாங்கட்டி நிச்சயம் வெற்றி படமாக அமையும் என நம்பலாம்.

  • income tax department sent notice to empuraan director prithviraj பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…