தூங்குமுன் அந்த கெட்ட பழக்கம்… நயன்தாரா இவ்வளவு பயந்தாங்கோலியா?

Author: Rajesh
23 January 2024, 4:38 pm

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

nayanthara

முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

nayanthara

ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இந்தியில் ஜவான் படத்தில் ஷாருக்கனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் , தமிழில் அன்னபூரணி திரைப்படத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளாகினார்.

இந்நிலையில் நயன்தாரா பேட்டி ஒன்றில் தனக்கு இருக்கும் கெட்ட பழக்கம் என்று கூறி ஒரு விஷயத்தை போட்டுடைத்துள்ளார். அதாவது, எனக்கு பேய் என்றால் பயமெல்லாம் இல்லை. ஆனால், லைட்டா பயம் தான். நான் இரவு நேரங்களில் தூங்க செல்லும்முன் லைட் ஆப் பண்ணவே மாட்டேன். இருட்டு என்றாலே எனக்கு பயம். அதனால் தூங்குமுன் லைட் ஆப் பண்ற பழக்கம் சின்ன வயசில் இருந்தே இல்லை என்றார். படங்களில் மிகவும் தைரியமான ரோல்களில் நடித்து வரும் லேடி சூப்பர் ஸ்டாருக்கே இருட்டு என்றால் பயமா? என ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்துள்ளனர்.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 434

    0

    0