அந்த நடிகர் கொடுத்த அழுத்தத்தால் கமலுடன் நடிக்க மறுத்த நயன்தாரா : அந்த நடிகர் யாருனா அவருக்கு பின்.. இவருக்கு முன்!

நடிகை நயன்தாரா குறித்து பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் பத்திரிகையாளரும் பிரபல நடிகருமான பயில்வான் ரங்கநாதன்.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நயன்தாரா உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்திய சினிமாவிலும் செல்வாக்கு மிக்க நடிகையாக உள்ளார். ஐயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்ததன் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை நயன்தாரா, பல கஷ்டங்களுக்கு பிறகு உச்ச நடிகையாக வலம் வருகிறார்.

தோல்விகளாலும் அவமானங்களாலும் செதுக்கப்பட்டவர்தான் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் நடிகர் சிம்புவுடன் காதல் உறவில் இருந்தார் நயன்தாரா. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.

இதனை தொடர்ந்து நயன்தாராவுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்களை வெளியிட்டார் சிம்பு. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நயன்தாரா தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு நடிகரும் இயக்குநருமான பிரபு தேவாவை காதலித்தார் நயன்தாரா. அவரை திருமணம் செய்யவும் முயன்றார். ஆனால் பிரபு தேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் அவரது மனைவி கடும் கண்டனம் தெரிவித்தார்.

நயன்தாராவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு அவரது கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. இதையடுத்து பிரபு தேவாவுடனான முறித்துக்கொண்டார்.

இதையடுத்து சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நயன்தாரா 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் படத்தில் நடித்தார் நடிகை நயன்தாரா. அப்போது விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதையடுத்து இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். கடந்த ஜூன் மாதம் ஊர் அறிய திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர்.

இதனால் கடந்த சில மாதங்களாகவே நடிகை நயன்தாரா பேசு பொருளாக உள்ளார். இந்நிலையில் நடிகை நயன்தாராவின் நடிப்பில் கனெக்ட் திரைப்படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால் நயன்தாரா மீண்டும் பேசு பொருளாகியுள்ளார்.

இந்நிலையில் நயன்தாரா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பத்திரிகையாளரும் திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன்.

அதில் பேசியிருக்கும் அவர், ஏற்கனவே காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாரா பல கட்ட சோதனைகளுக்கு பிறகு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். விக்னேஷ் சிவனை தனக்கு பாதுகாப்பு அதிகாரியாகவும் வைத்துக்கொண்டார்.

விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கு செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கு வீடு வாங்கி கொடுத்துள்ளார். மருமகளாக செய்ய வேண்டிய கடமை அனைத்தையும் செய்துள்ளார்.

நயன்தாராவுக்காகவே படங்கள் ஓடுகின்றன. அந்த காலத்து ஹீரோயின்களை போல பண்பட்ட நடிகையாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து வருகிறார்.

நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்பு சில ஆண்டுகள் ஆர்யாவுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இருவரும் மலையாளிகள் என்பதால் நெருக்கமாக பழகினர். ஆர்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த நயன்தாரா, அவர் கதை கேட்டு ஓகே சொன்ன பிறகுதான் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்து வந்தார்.

நடிகர் கமல்ஹாசனுடன் நயன்தாரா படங்களில் நடிக்க மறுத்தார். காரணம், கமலுடன் நடித்தால் முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும் என்பதாலேயே அவருடன் நடிக்க மறுத்தார் நயன்தாரா.

விக்னேஷ் சிவனை திருமணம் செய்து அதையும் பிரபல ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்து பல கோடிகளை சம்பாதித்துள்ளார் நயன்தாரா. இவ்வாறு நயன்தாரா குறித்த தகவல்களை கூறியுள்ளார் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் : சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை!

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…

1 minute ago

திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ

எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

4 minutes ago

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு; அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படமா?

அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…

40 minutes ago

வெளிநாட்டுக்கு ஜாலி ட்ரிப் அடித்த நட்சத்திர ஜோடி.. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டீங்களே!

சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…

48 minutes ago

வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…

யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…

2 hours ago

கசிந்த தகவல்..அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…

3 hours ago

This website uses cookies.