ரஜினியும் வேண்டாம் விஜய்யும் வேண்டாம்… கோலிவுட்டுக்கே ஷாக் கொடுத்த நயன்தாரா!!!

Author: Vignesh
6 September 2023, 4:39 pm

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

nayanthara - updatenews360.jpg 2

தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

nayanthara

ஆனாலும், முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் ஜவான் படத்தில் ஷாருக்கனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் முதன்முறையாக இன்ஸ்டாக்ராமுக்கு வந்த நயன்தாரா முதல் பதிவாக தனது இரட்டை மகன்களுடன் மாஸான போஸ் ஒன்றை கொடுத்தார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி ட்ரெண்டானது.

nayanthara - updatenews360 g

இந்நிலையில் நயன்தாரா இன்ஸ்டாக்ராமுக்கு வந்ததன் காரணமே ஜவான் படத்தின் ப்ரோமோஷனுக்காக தானாம். மகன்களுடன் வீடியோ வெளியிட்ட சில நிமிடத்தில் ஜவான் படத்தின் வீடியோவையும் வெளியிட்டு ப்ரோமோஷனை துவங்கிவிட்டார்.

nayanthara - updatenews360.jpg 2

இதனிடையே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நயன்தாரா தற்போது 20 பிரபலங்களை பின்தொடர்கிறார். அவருக்கு மூன்று மில்லியன் ஃபாளோயர்கள் உள்ளனர். குறிப்பாக நடிகைகள் பார்வதி, அபர்னா பாலமுரளி, அலியாபட், தீபிகா படுகோனே, கேத்ரீனா கைஃப், சமந்தா, ஹாலிவுட் நடிகையான ஜெனிஃபெர் அனிஸ்டன் உள்ளிட்டோரை பின்தொடர்கிறார். நடிகர்களில் பாலிவுட் நடிகரான ஷாருக்கானை அவர் பின் தொடரும் நிலையில், ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட தமிழ் நடிகர்களை அவர் பின்தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ