பில்லா படத்தில் நயன்தாரா பண்ண காரியம்….போட்டுடைத்த பிரபல இயக்குனர்..!
Author: Selvan7 December 2024, 7:21 pm
பில்லா படத்தில் நயன்தாராவின் அர்ப்பணிப்பு
தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய திறமையால் முன்னேறி லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா.
இவருடைய சினிமா வாழ்க்கையில் நிறைய சோகமான பக்கங்கள் இருந்தாலும்,அதை எல்லாம் மனதில் போட்டு துவண்டு போவாமல் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
ஐயா திரைப்படத்தில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்து,கிட்டத்தட்ட 75 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கரம் பிடித்து,தற்போது அவர்களுக்கு இரண்டு ரெட்டை குழந்தைகள் உள்ளனர்.
இதையும் படியுங்க: காதலருடன் ராஷ்மிகா செய்த செயல்:வெளிவந்த புகைப்படம்…எங்க போய் முடியும்னு தெரியல..!
நயன்தாரா நடிப்பில் வெளிவந்த பில்லா திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையியாக அமைந்தது. இந்நிலையில் நயன்தாரா குறித்து இயக்குனர் விஷ்ணு வர்தன் சில விசயங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் பில்லா படத்தை தொடங்கும் போது தனிப்பட்ட காரணங்களுக்காக சில நாட்கள் படத்திலிருந்து விலகியிருந்தார்.பின்பு மீண்டும் அவர் நடிக்க முடிவு செய்து படக்குழுவுடன் பயணித்தார்.
அந்த இடைப்பட்ட நாட்களில் தன்னுடைய உடல் எடையை குறைத்து பிட் ஆக அந்த கேரக்டர்க்கு வந்தார்.இதனால் பில்லா படத்தில் நயன்தாராவின் ரோலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
நயன்தாரா ஒரு தைரியமான பெண்மணி,அவருடைய நல்ல குணம் தான் அவரை சினிமாவில் உச்சத்திற்கு அழைத்து சென்றுள்ளது என விஷ்ணு வர்தன் அந்த பேட்டியில் கூறியிருப்பார்.