புரொமோஷன்களுக்கு ஏன் வருவதில்லை?.. 20 வருட சினிமா துறையின் அனுபவங்கள் குறித்து – நடிகை நயன்தாரா விளக்கம்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வணிகரீதியாக மற்றும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களைக் கொடுத்து பார்வையாளர்கள் மத்தியில் வெற்றிப் பெற்று வருகிறார். அந்த வகையில், ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட ‘கனெக்ட்’ திரைப்படம் நேற்று (டிசம்பர் 22, 2022) வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய ஓப்பனிங்கை கொடுத்துள்ளது.

மேலும் படம் பார்வையாளர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த உற்சாகத்தோடு நடிகை நயன்தாரா ‘கனெக்ட்’ படத்தில் பணிபுரிந்தது பற்றியும் தன்னுடைய 20 வருட திரையுலக பயணம் பற்றியும் பகிர்ந்திருக்கிறார்.


சினிமாவில் தனது இருபது வருட பயணம் பற்றி பக்ரிந்து கொள்ளும்போது, ‘இந்த மிகப்பெரிய திரையுலகில் நான் ஒரு சிறு அங்கமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக நான் தீவிரமாக உழைத்தேன். இன்று, கடவுள் எனக்கு ஒரு அற்புதமான வாழ்க்கையை கொடுத்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், இந்த 20 வருட திரைப்பயணம் அற்புதமான அனுபவமாக இருந்தது” என்றார்.

தமிழ் சினிமாவில் பெண்களை மையப்படுத்திய கதைகளை அதிக அளவில் முன்னெடுத்ததற்காக நடிகை நயன்தாரா ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என அழைக்கப்படுகிறார். இதுகுறித்து அவர் மகிழ்ச்சியுடன் பேசும்போது, ‘குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கதாநாயகியகளுக்கு திரையில் முக்கியத்துவம், இசை வெளியீட்டு விழா, பட புரோமோஷன்களில் கூட குறைவான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை உணர்ந்தேன்.

இதன் காரணமாகவே நான் பல நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை. இதனாலேயே, நான் அதிகமாக பெண்களை மையப்படுத்திய கதைகளில் நடிப்பதற்கு முன்னுரிமை கொடுத்தேன். அப்படி நான் தேர்ந்தெடுத்தப் படங்களுக்கு பார்வையாளர்களிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைத்தது. இப்போது 10-15 ஹீரோ செண்ட்ரிக் படங்கள் வந்தாலும் அதில் 5-6 ஹீரோயின் செண்ட்ரிக் படங்களும் வருகிறது என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோல, இதுபோன்ற படங்களைத் தயாரிக்கத் தயாரிப்பாளர்களும் முன்வருகிறார்கள் என்பதும் இது ஒரு ட்ரெண்டாகவே மாறி வருகிறதும் என்பதை கேட்கும் சந்தோஷமாக இருக்கிறது’.

திறமையான நடிகர்களான சத்யராஜ் மற்றும் அனுபம் கெர் ஆகியவர்களுடன் ‘கனெக்ட்’ படத்தில் நடித்தது குறித்தான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் நயன்தாரா, ‘இவர்களைப் போன்ற அன்பான நடிகர்களுடன் வேலை செய்ததை ஆசீர்வாதமாகவே கருதுகிறேன். ஒவ்வொரு முறையும் சத்யராஜ் சாருடைய நடிப்பைத் திரையில் பார்க்கும்போது வியந்து போவேன். திறமையான நடிகர்களான சத்யராஜ் மற்றும் அனுபம் கெர் நடிப்பின் மூலம் ‘கனெக்ட்’ திரைப்படம் நிச்சயம் சிறந்ததாக வெளிவரும்.

அஷ்வின் சரவணனுக்கு கதை மீதுள்ள நம்பிக்கை அவருடைய தெளிவான திரைக்கதை இந்த படத்தை அவர் உருவாகியுள்ள விதம் இவை அனைத்து பாராட்டுதலுக்குரியது. திரைக்கதையில் என்ன எழுதி இருக்கிறாரோ அதை அப்படியே படமாக்கியுள்ளார். படத்தில் உள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் என நாங்கள் அனைவரும் ஒரு குழுவாக இணைந்து ஹாரர் பட விரும்பிகளுக்குப் பிடித்த வகையில் ‘கனெக்ட்’ படத்தை நல்ல திரையரங்க அனுபவமாக எடுத்துள்ளோம் என்பதில் மகிழ்ச்சி’.

பேய் நம்பிக்கை இருக்கிறதா என்பது குறித்தான கேள்விக்கு பதிலளித்த நயன்தாரா, ‘அது போன்ற விஷயங்களில் எனக்கும் நம்பிக்கை இல்லை என்றாலும் நான் தனியாக இருக்கும்போது பயமாக இருக்கும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நான் பேய்ப் படங்களின் மிகப்பெரிய ரசிகை. சில வருடங்களுக்கு முன்பாக தனியாக பேய்ப் படங்கள் பார்ப்பது என்னுடைய வழக்கமாக இருந்திருக்கிறது. முரண்பாடுகள், மோதல்கள் மற்றும் மர்மங்கள் நிறந்திருக்கும் திகில் கதைகள் எப்போதுமே என் விருப்பத்துக்குரியதாய் இருந்திருக்கிறது’ என்றார்.

‘கனெக்ட்’ திரைப்படத்தை விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்க அஷ்வின் ’மாயா’, ‘கேம் ஓவர்’ படப்புகழ் சரவணன் இயக்கி இருக்கீறார். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று (டிசம்பர் 22, 2022) வெளியாகி இருக்கிறது. மேலும், படத்தின் இந்தி வெர்ஷன் டிசம்பர் 30,2022 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

Poorni

Recent Posts

தளபதி விஜய் CM ஆனால்.. ராகுல் காந்தி PM : எழுதி வெச்சிக்கோங்க.. தவெக பெண் நிர்வாகி பேச்சு!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…

14 hours ago

தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…

14 hours ago

ருதுராஜ்க்கு பதில் மீண்டும் கேப்டனாக தல தோனி : சிஎஸ்கே அணியில் நடந்த திடீர் மாற்றம்!

2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…

15 hours ago

ரீரிலீஸுக்கு தயாராகி வரும் ரஜினிகாந்தின் அனிமேஷன் திரைப்படம்! அதுவும் புதுப்பொலிவுடன்…

அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…

16 hours ago

பேட்டிக் கொடுக்க பயந்தாரா புஸ்ஸி ஆனந்த்.. தெறித்து ஓடிய தவெக தொண்டர்கள்!

வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…

16 hours ago

மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?

ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…

16 hours ago

This website uses cookies.