நயன்தாரா ஒரு பக்கா ஹவுஸ் Wife… வீட்டில் இப்படித்தான் இருப்பார் – கலா மாஸ்டர் புகழாரம்!

Author: Shree
30 September 2023, 8:40 pm

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

nayanthara vignesh shivan

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

nayanthara son

இப்படியான நேரத்தில் நயன்தாரா புதிய பிசினஸ் ஒன்றை ஆரம்பித்துள்ளார். 9 skin சருமம் சார்ந்த பொருட்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலா மாஸ்டர் நயன்தாரா குறித்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை கூறினார். அதாவது நயனதாரா ஒரு பக்காவான ஹவுஸ் Wife… அவர் வீட்டில் அவ்வளவு பொறுப்பான மனைவியாக, அன்பான அம்மாவாக இருப்பதை நான் பார்த்துள்ளேன். ஜவான் படத்தின் ஷூட்டிங்கிற்கு தனது இரட்டை குழந்தைகளை தூக்கி கொண்டுக்வந்து அவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்வார். மேலும், அவரின் வீட்டிற்கு சென்றுவிட்டாள் அப்படி கவனிப்பார் என கலா மாஸ்டர் அந்த பேட்டியில் கூறினார்.

  • Mufasa The Lion King Tamil Dubbed“முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!
  • Views: - 1179

    7

    4