சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்த நயன்தாரா..? இதுக்கு அந்த ரெண்டு பேர் தான் காரணமாம்..!

Author: Vignesh
23 February 2023, 3:30 pm

Nayanthara__Vignesh_Shivan_updatenews360

நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. திருமணத்திற்கு பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாய்யாகியுள்ளார்.

இரட்டை குழந்தைகள் சர்ச்சை சற்று ஓய்ந்த நிலையில், விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து AK62 படம் எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு, திடீரென ஏகே 62ல் விக்னேஷ் சிவன் தூக்கப்பட்டார். இதற்கு நயன்தாரா தான் காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகை நயன்தாரா சினிமாவில் இருந்து விலக போவதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

Hottest Mum Nayanthara - Updatnews360

தனது இரட்டை குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகவும், கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு, இனி தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி நயன்தாராவின் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது.

  • Allu Arjun controversy போலீசை எதிர்த்த அல்லு அர்ஜுன்…தீவிர நடவடிக்கையில் தெலுங்கானா அரசு..!
  • Views: - 436

    0

    0