லேடி சூப்பர் ஸ்டாரா? அதெல்லாம் உங்க ஊர்ல…. நயன்தாரா வாலை ஒட்ட நறுக்கிய தீபிகா படுகோன்!
Author: Shree21 September 2023, 7:32 pm
தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆன இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்திருந்தார்.

இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்த நயன்தாரா ஜவான் படத்தை மிகப்பெரிய கனவு படமாக நினைத்துக்கொண்டு அதனை பெரிதும் நம்பிக்கொண்டிருந்தார். இப்படத்தில் நயன்தாராவுடன் பிரபல பாலிவுட் ஸ்டார் நடிகை தீபிகா படுகோன் நடித்திருந்தார். இரண்டு நட்சத்திர நடிகைகள் ஒரே படத்தில் நடித்தாலே தேவையில்லாத பிரச்சனைகளெல்லாம் வரும்.
அப்படித்தான் தற்போது ஜவான் படத்தில் ஏன் தான் நடித்தேனோ? என புலம்பிக்கொண்டிருக்கிறாராம் நயன்தாரா. ஆம், இப்படத்தில் தனக்கு மிகப்பெரிய ரோல் என கூறி அட்லீ நம்ப வைத்து தன்னை ஏமாற்றிவிட்டதாக புலம்பி வருகிறாராம். இப்படம் முழுக்க தீபிகா படுகோன் காட்சிகளை வைத்துவிட்டு நயன்தாரா ஏதோ கெஸ்ட் ரோலில் நடித்தது போன்று காட்டிவிட்டார் அட்லீ. நயன்தாரா நடித்த காட்சிகள் அனைத்தையும் வெட்டி தூக்கி எறிந்துவிட்டாராம்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட ஷாருக்கான், தீபிகா படுகோனிடம், ” உங்களுக்கு சின்ன ரோல் என்று கூறி நாங்கள் பிராங் பண்ணிட்டோம் மன்னிச்சிக்கோங்க என கூறினாராம். ஆனால் அவர்கள் பிராங் பண்ணது என்னமோ நயன்தாராவை தான். இதனால் நயன்தாரா மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம். பாலிவுட்டில் அறிமுகமாகி அங்கும் லேடி சூப்பர் ஸ்டார் ஆகிவிடலாம் என கனவு கண்டு ஓவ ர் ஆட்டம் போட்ட நயன்தாராவின் வாலை ஒட்ட நறுக்கிவிட்டார் தீபிகா படுகோன்.