மீண்டும் தனுஷை சீண்டிய நயன்தாரா…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!

Author: Selvan
29 November 2024, 4:27 pm

“கர்மா வட்டியுடன் திரும்பும்”–நயன்தாரா பதிவு

நடிகர் தனுசும்-ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில் நயன்தாரா அதை மறைமுகமாக தாக்கி இன்ஸ்டாவில் போட்ட பதிவு வைரல் ஆகி வருகிறது.

நயன்தாரா-தனுஷ் பிரச்னை ஏற்கனவே பூகம்பம் மாதிரி வெடித்து,தனுஷ் நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டார்.அதற்கு நயன்தாரா 3 பக்க அறிக்கையை வெளியிட்டு எதிர்ப்புதெரிவித்தார்.

Nayanthara's cryptic Instagram post

இந்நிலையில் நானும் ரவுடி தான் பாடல் காட்சிகளை பயன்படுத்தியதற்காக தனுஷ் நயன்தாரா,விக்னேஷ் சிவன்,நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படியுங்க: சமந்தாவுக்கு ரூட்டு விடும் பாலிவுட் நடிகர்…அட ஜோடி பொருத்தம் பக்காவா இருக்குமே..!

இதனை மறைமுகமாக தாக்கும் விதமாக நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டுள்ளார்.

அதில் “நீங்கள் பொய் சொல்லி ஒருவரின் வாழ்க்கையை அழிக்கும் போது அதை கடனாக எடுத்துக்கொள்ளுங்கள் அது உங்களுக்கு வட்டியுடன் திரும்ப வரும் என கர்மா சொன்னதாக குறிப்பிட்டு அதில் அடிக்கோடிட்டு காட்டியும் இருக்கிறார்” நயன்தாரா.

Nayanthara's karma statement viral

இந்த பதிவு தனுஷின் விவாகரத்தை மறைமுகமாக தாக்கியுள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!