இயக்குனர் சிவாவை டார்ச்சர் செய்த நயன்தாரா:பிஸ்மி சொன்ன தகவல்… பரபரப்பில் கோலிவுட்..!
Author: Selvan15 December 2024, 7:05 pm
நயன்தாராவின் “லேடி சூப்பர்ஸ்டார்” விவகாரம்
தமிழ் சினிமாவில் தற்போது சர்ச்சைக்கு பேர் போன நடிகையாக மாறி வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.இவர் சமீபத்தில் ஒரு ஆங்கில சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.அதில் தன்னுடைய படங்களுக்கு லேடி சூப்பர் ஸ்டார் டைட்டிலை சேர்க்க வேண்டாம் என தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை வைப்பேன் என்று கூறியிருப்பார்.
இந்த கருத்து குறித்து வலைபேச்சு பிஸ்மி ஒரு தகவலை சொல்லியுள்ளார்.நயன்தாரா, தனது பட ஒப்பந்தங்களில் “லேடி சூப்பர்ஸ்டார்” பட்டத்தை குறிப்பாக சேர்க்க வேண்டும் என திட்டமிட்டு கூறுவார் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க: சிங்கப்பூருக்கு படையெடுத்த “சிம்பு”…ரசிகைக்கு கொடுத்த பரிசு..வைரலாகும் வீடியோ..!
அண்ணாத்த படத்தின் போதும் இது ஒரு முக்கிய பிரச்சனையாக எழுந்தது.
ரஜினிகாந்த் ஏற்கனவே “சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படுவதால், அந்த படத்திற்கு லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் சேர்க்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் மறுத்தது.
நயன்தாராவின் கோரிக்கையை நிறைவேற்ற, இயக்குநர் சிவா சிபாரிசு செய்ததால் “லேடி சூப்பர்ஸ்டார்” பட்டம் அப்படத்திற்கு சேர்க்கப்பட்டதாகவும்,பிஸ்மி தெரிவித்தார்.
நயன்தாரா கடந்த 10 படங்களின் போஸ்டர்கள் மற்றும் ஒப்பந்தங்களின் விபரங்களை வெளிப்படுத்துவாரா என்று பிஸ்மி கேள்வியும் எழுப்பியுள்ளார்.இந்த தகவலால் யார் சொல்லுவது உண்மை என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.