தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.
முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.
தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.
ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இந்தியில் ஜவான் படத்தில் ஷாருக்கனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் , தமிழில் அன்னபூரணி திரைப்படத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளாகினார்.
இந்நிலையில் நயன்தாரா பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை சப்ப காரணம் காட்டி தவறவிட்டுள்ளார். அதாவது, கார்த்திக் தமன்னா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் “பையா” இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா தானாம். தயாரிப்பாளர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் அவரும் தாறுமாறான சம்பளம் கேட்டதால் முடியாது என கூறிவிட்டு தம்மன்னாவை கமிட் செய்தார்களாம்.
அதே போல் உதயநிதி ஸ்டாலின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் அடித்து அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடிக்க நடிகை நயன்தாராவுக்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், அந்த தா சமயம் நயன்தாரா காதல் சர்ச்சைகளில் சிக்கியதால் எந்த படத்திலும் நடிக்காமல் ஆர்வம் காட்டாமல் நிராகரித்துவிட்டாராம்.
அதே போல் தீபிகா படுகோன் – ஷாருக்கான் நடித்து மாபெரும் ஹிட் அடித்து பல கோடிகள் லாபம் கொடுத்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா தானாம். ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வேண்டாம் என கூறிவிட்டு பின்னர் வருந்தினராம். அந்த படத்தில் மட்டும் நடித்திருந்தால் நயன்தாரா பாலிவுட்டின் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார் என்கிறது திரை வட்டாரம்.
மிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக எடப்பாடி…
சந்தோஷத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனா சந்திப்பு குறித்து தன்னுடைய…
அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு…
முதல் முறையாக, ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசுவதற்காக வேதா இல்லத்திற்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை:…
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
This website uses cookies.