நடிகை நயன்தாராவை பற்றி யாருக்கும் தெரியாத சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் நயன்தாராவின் மாமியாரும் விக்னேஷ் சிவனின் தாயாருமான மீனா குமாரி. தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்பது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் விக்கி – நயன்தாரா இருவருமே இதுகுறித்து பதிலளிக்காமல் வந்தனர்.
இந்நிலையில் ரசிகர்களின் நீண்ட நாள் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த சில மாதங்களு கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ்நாடே வியக்கும் வகையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், முக்கிய நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அதன் பின்னர் சில மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாகவும் அறிவித்தது பல கேள்விகளை எழுப்பியது. பின்னர் அந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்தது கடும் சர்ச்சையானது. பின்னர் அதுவும் ஓய்ந்தது.
ஒரு வழியாக சர்ச்சைகளில் இருந்து விலகி மகிழ்ச்சியாக வாழ்க்கை பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர் விக்கியும் நயன்தாராவும். சில நேரங்களில் விக்கி நயன்தாரா குறித்த விவரங்களை அவர்களது குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலோனோர் விக்கி மீது அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நடிகை நயன்தாராவை பற்றி யாருக்கும் தெரியாத சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
நயன்தாராவின் மாமியாரும் விக்னேஷ் சிவனின் தாயாருமான மீனா குமாரி. வேலைக்கார பெண் இதுகுறித்து பேசி இருக்கும் அவர்,”நயன்தாரா வீட்டில் மிகவும் எளிமையாக நடந்து கொள்வார். அவரது வீட்டில் எட்டு பேர் பணியாளர்களாக இருக்கின்றனர். அதில் நான்கு பேர் ஆண்கள் நான்கு பேர் பெண்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வீட்டில் பணிபுரியும் பெண் பணியாளர் ஒருவர் சோகமாக இருந்திருக்கிறார். இதனை கவனித்த நயன்தாரா என்ன பிரச்சனை என கேட்டபோது 4 லட்சம் ரூபாய் கடன் சோகத்தில் இருப்பதாக கூறியிருக்கிறார். எதுவுமே யோசிக்காத நயன்தாரா 4 லட்சம் ரூபாய் உடனடியாக அந்த பெண்ணுக்கு கொடுத்து கடனை அடைக்குமாறு கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்தை நானும் பார்த்தேன். நயன்தாராவுடன் நிறைய பணம் இருந்தாலும் பணியாளருக்கு உடனடியாக 4 லட்சம் ரூபாய் கொடுப்பதற்கெல்லாம் ஒரு பெரிய மனது வேண்டும். மேலும் அந்த வீட்டில் இருக்கும் பெண் கடினமாக உழைக்கக் கூடியவர் என்பதோடு நேர்மையாகவும் இருப்பார்.
அதனால்தான் நயன்தாரா எதையுமே யோசிக்காமல் பணம் கொடுத்தார். இதேபோல நயன்தாராவின் அம்மாவும் உதவும் மனதுக்காரர் தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து தமிழகம் வந்த அவர் வீட்டில் இருந்த யாருக்குமே தெரியாமல் வேலைக்கார பெண்ணுக்கு தங்க வளையலை பரிசளித்தார். அந்த அளவுக்கு பணியாளர்கள் என்றாலும் மிகவும் பாசமாக இருப்பார்கள். ஏன் நயன்தாராவை கேட்காமல் வீட்டில் வேலை பார்ப்பவர்கள் சாப்பிட கூட மாட்டார்கள்’ எனக் கூறியிருக்கிறார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.