வாய்ப்பு இல்ல வேற வழி இல்ல… ஹீரோவுடன் அட்ஜெஸ்ட் பண்ணும் நயன்தாரா!

Author: Shree
10 March 2023, 5:02 pm
nayanthara
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கோடிகளில் சம்பளம் வாங்கி உச்சத்தில் இருந்த நயன்தாராவுக்கு இப்போது கெட்ட நேரம் என்றே சொல்லலாம். ஆம், அவரும் சரி அவரது கணவரும் சரி தொடர்ந்து பிரச்சனை சந்தித்து வருகிறார்கள்.

திருமணத்திற்கு பின்னர் நயன்தாராவின் மார்க்கெட் குறைந்துவிட்டது. எந்த புதுப்பட வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். கடைசியாக வெளியாகிய கனெக்ட் திரைப்பதை பெரிதாக நம்பினார். ஆனால், அதுவும் கைகொடுக்கவில்லை.

இப்படியான நேரத்தில் விட்ட இடத்தை பிடிக்க லோ பட்ஜெட் ஹீரோ ஒருவருடன் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம். போன போகட்டும் இதுவாச்சும் ஹிட் அடிக்குதான்னு பார்க்கலாம் என அட்ஜெட் பண்ணி நடிக்க ஒப்புக்கொண்டாராம். லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இப்படத்தை ரத்னம் இயக்குகிறார்.

ஹீரோ யார் தெரியுமா? டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் தானாம். இது திகில் படமாம், அதில் நயன்தாரா ரோல் அழுத்தமானதாக இருக்குமாம் அதனால் நயன்தாரா இப்படத்தை பெரிதாக நம்பிக்கொண்டிருக்கிறாராம். என்னடா இது லேடி சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை? என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

Views: - 997

38

22