விக்னேஷ் சிவனை கழட்டிவிட்ட நயன்தாரா.. ஜோசியர் சொன்னது அதுக்குள்ள ஒர்க் அவுட் ஆயிடுச்சா..!

Author: Vignesh
17 January 2024, 2:44 pm

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகையான நயன்தார தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

nayanthara vignesh shivan

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே 9 ஸ்கின் என்ற சருமம் சார்ந்த products தொழில் ஒன்றை ஆரம்பித்தார்.

சமீபத்தில் femi9 என்ற நேப்கின் கம்பெனி ஒன்றை சொந்தமாக துவங்கி நடத்தி வருகிறார். அந்த பிராண்டின் ப்ரோமோஷன் விழாவில் நயன்தாரா பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார்.

Astrologer Venu Samy

இந்நிலையில், ஜோதிடர் வேணு சாமி என்பவர் நயன்தாரா விக்னேஷ் சிவன் விரைவில் பிரிந்து விடுவார்கள் என்றும், அது நடக்கவில்லை என்றால் ஜோதிடத்தை விட்டு விடுவேன் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். இவர் இப்படி பேசியது சினிமா வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா திருமணத்தின்போது இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று வேணுசாமி கூறியிருந்தார்.

தற்போது, நயன்தாரா விக்னேஷ் சிவன் விஷயத்திலும் இப்படி கூறியிருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், எல்ஐசி என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் எல்ஐசி நிறுவனம் இந்த தலைப்பை பயன்படுத்த அனுமதி இல்லை என்று அறிக்கை கொடுத்துள்ளது. இந்த நிலையில், இந்த தலைப்பு மாறுவதற்கு வாய்ப்பு உண்டு.

lic

இப்படத்தில், பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி செட்டி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தில், நயன்தாரா ஹீரோ பிரதீப் ரங்க நாதனின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் முன்பே வெளியானது. ஆனால், தற்போது விஷயம் என்னவென்றால் இப்படத்தில் இருந்து நயன்தாரா விலகி விட்டாராம்.

nayanthara - updatenews360.jpg 2

அதாவது, நயன்தாராவின் சம்பளம் 12 கோடியாக உயர்ந்து விட்டது என கூறப்படுகிறது. இதனால், படத்தின் பட்ஜெட்க்கு நயன்தாராவின் சம்பளம் தாங்காது என தயாரிப்பாளர் கூறியதன் காரணமாக நயன்தாரா படத்தை இருந்து விலகி உள்ளார். இதனை, பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். மேலும், நயன் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னதாக ஜோசியர் ஒருவர் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று கூறியிருந்தார். இதை அடுத்து, இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதால் ரசிகர்கள் அதுக்குள்ள ஜோசியர் சொன்னது ஒர்க் அவுட் ஆயிடுச்சா என்று தெரிவித்து வருகின்றனர்.

  • Premgi Amaren marriage newsநடிகர் பிரேம்ஜிக்கு இப்படி ஒரு பிரச்சனையா..மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்..!
  • Views: - 330

    0

    0