விக்னேஷ் சிவனை பிரிந்த நயன்தாரா.. வேதனையில் உருக்கமாக போட்ட பதிவு..!

Author: Vignesh
27 March 2024, 5:05 pm

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தக்க வைத்திருக்கும் நயன்தாராவுக்கு கல்யாணம் எப்போது ஆகியதோ அவரது, மார்க்கெட் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. சமீபத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த அன்னபூரணி, இறைவன் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது.

nayanthara - updatenews360.jpg 2

இதனிடையே, பாலிவுட் சென்று அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் ஆயிரம் கோடி வசூல் பெற்றிருந்தாலும், லக்கி ஹீரோயினாக பெயர் எடுத்து மீண்டும் அடுத்த ஆட்டத்திற்கு தயாராகியுள்ளார் நயன்தாரா. அடுத்ததாக, தி டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

nayanthara

இந்தியாவில், அழகு சாதன பொருட்கள் முதல் சானிடரி நாப்கின் வரை விற்பனை செய்ய வரும் நயன்தாரா கனடா நாட்டிலும் தனது புதிய கடையை திறந்து விட்டதாக இன்ஸ்டாகிராமில், சூப்பர் போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

nayantha

இந்நிலையில், விக்னேஷ் சிவன் அவரது படத்தின் ஷூட்டிங்கிற்காக 20 நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு தற்போது, வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். அவரை மிஸ் செய்ததாகவும், 20 நாள் கழித்து பார்க்கும் போது, வந்த உணர்ச்சி எப்படி இருந்தது என சொல்ல முடியவில்லை என நயன்தாரா குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவு தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகிறது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!