நயன்தாரா மட்டும் சிக்கியிருந்தா வேற மாதிரி சம்பவம்…. தனுஷ் வலையில் மாட்டியும் நழுவி ஓடிய நித்தியா மேனன்!

Author: Shree
9 August 2023, 12:40 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் பெரிதாக திரைத்துறை சேர்ந்த பின் பலம் இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து ஹீரோவுக்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் தொடர்ந்து தனது முயற்சியால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று உச்ச நடிகராக மார்க்கெட் பிடித்துவிட்டார்.

2002 ஆம் ஆண்டு செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமான தனுஷ் பல கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி மக்கள் மனதில் பிரபலமான முகமாக பார்க்கப்பட துவங்கினார்.

வணிக ரீதியில் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றுக் கொண்டார்.

அப்புறம் என்ன தொட்டதெல்லாம் ஹிட் என்றவாறு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். திருடா திருடி, தேவதையைக் கண்டேன் போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார்.

மேலும் சுள்ளான், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம்,பொல்லாதவன் , யாரடி நீ மோகினி, படிக்காதவன், ஆடுகளம், வேங்கை, மயக்கம் என்ன, மரியான், வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்க மகன்,ப. பாண்டி , வேலையில்லா பட்டதாரி 2, வட சென்னை, அசுரன், கர்ணன் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகராக இருக்கிறார்.

தனுஷ் சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டிருக்கிறார். இதனிடையே பாலிவுட், ஹாலிவுட் என நடித்து வருகிறார். இதனிடையே தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் தனுஷ் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இவர் சிறந்த நடிகராக இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் வீக் என்பது திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கே தெரியும்.

அதனால் நடிகைகளே இவருடன் நடிக்க கொஞ்சம் தயங்குவார்கள். அட்ஜெஸ்ட்மெண்டிற்கு தயங்காமல் ஓகே சொல்லும் நடிகைகள் தான் தனுஷ் உடன் நடிக்க முடியும் என பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகும். இந்நிலையில் அப்படித்தான் திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யாமேனன் கேரக்டரில் நடிக்க முதலில் நயன்தாராவுக்கு தான் வாய்ப்பு கிடைத்ததாம்.

ஆனால் அவர் சில காரணங்களுக்காக நடிக்காமல் போக பின்னர் நித்யாமேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டாராம். ஒரு வேலை நயன்தாரா தனுஷ் உடன் நடித்திருந்தால் நிச்சயம் கிசு கிசு செய்திகள் வெளியாகியிருக்கும். ஆனால் நித்யா மேனன் தனுஷ் வலையில் சிக்காமல் நடிக்கும் வேலையை மட்டும் சிறப்பாக செய்துவிட்டு அவரது பிடியில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 821

    2

    0