நீ கேட்கும் சம்பளம் கொடுக்க முடியாது… – கணவர் படத்தில் இருந்து துரத்தப்பட்டாரா நயன்தாரா?

Author: Rajesh
17 January 2024, 7:59 pm

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து லவ் இஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் LIC என்ற படத்தை இயக்கி வருகிறார். காதல் கலாட்டா திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கான இசையினை அனிருத் செய்ய, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் படத்தயாரிப்புப் பொறுப்பினை ஏற்றுள்ளது. இப்படம் ரூ. 60 கோடி பட்ஜெட்டில் லலித்குமார் தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

lic

இப்படத்தில் அக்காவாக நடிக்கப்போகும் நயன்தாரா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியது. இந்த ரோலுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் நயன்தாரா கேட்கும் சம்பளத்தை கொடுக்க முடியாது என தயாரிப்பாளர் லலித் குமார் கூறிவிட்டாராம்.

காரணம் இப்படத்தை குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்க முன்னதாகவே திட்டமிட்டிருந்தார்களாம் அதனால் நயன்தாராவுக்கு சம்பளம் கொடுக்க முடியாது என கூறியதாகவும் வேண்டுமானால் தனது சம்பளத்தை நயன்தாரா குறைத்துக்கொள்ளட்டும் அப்படியில்லையெனில் அவருக்கு பதில் வேறொரு நடிகையை நடிக்க வைத்துக்கொள்ளலாம் என கூறிவிட்டார்கள்.

இதை கேட்டு ரசிகர்கள் கணவர் படத்திலே நயன்தாராவை ஒதுக்கிவிட்டார்களா? என கேட்டு வருகின்றனர். எனவே இனிமேல் நயன்தாரா தான் முடிவு எடுக்கவேண்டும். கணவருக்காக அவர் சம்பளத்தை குறைப்பாரா? அல்லது வேண்டாம் என கூறிவிடுவாரா? என்பது இனிமேல் தான் தெரியும்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 352

    0

    0