மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றின் மீது தீராத ஆசை, காதல் இருக்கும் அதை எப்படியாவது, அடையவேண்டும் என தங்களது வாழ்நாளில் போராடி ஜெயித்து காட்டுவார்கள். அப்படித்தான் இந்தியாவின் பிரபலமான குறிப்பாக சென்னையின் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவரான லெஜண்ட் சரவணன் தொலைக்காட்சிகளில் தீபாவளி, பொங்கல் நாட்களில் கலர் கலர் ஆடைகளை அணிந்துக்கொண்டு இளம் நடிகைகளுடன் ஆட்டம் போட்டு தனது தொழிலுக்கு தானே விளம்பரம் தேடிக்கொள்வார்.
இவரது நடிப்பில் வெளிவரும் அந்த விளம்பர வீடியோக்களுக்கு நிறைய விமர்சனங்கள், கேலி, கிண்டல்கள் வெளியானாலும் அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளவே மாட்டார். ஒரு கட்டத்திற்கு பிறகு மக்களே அவரது விளம்பரத்திற்காக காத்திருந்து பார்க்க ஆரம்பித்தார்கள். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டு எழுந்தது. அதற்காக தன்னிடம் கொட்டிக்கிடக்கும் பல கோடி பணத்தை வைத்துக்கொண்டு படத்தை தயாரித்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி வெளியான திரைப்படம் தான் ” தி லெஜெண்ட் “
பலகோடி செலவில் உருவாகி வெளியான இப்படம் லாபத்தை ஈட்டவில்லை. ஆனால், அவருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு துவண்டுபோகாமல் தற்போது மீண்டும் தனது அடுத்த படத்தின் வேலையை ஆரம்பித்துள்ளார். அண்மையில் கூட புதிய லுக்கில் லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரலாகியது.
ஆம், லெஜெண்ட் சரவணன் தனது இரண்டாவது படத்திற்கான கதையை இறுதி செய்யும் பணியில் லெஜண்ட் ஈடுபட்டு வந்த நிலையில் ஒரு கதையை தற்போது தேர்வு செய்து ஓகே சொல்லிவிட்டாராம். அதற்காக முன்னணி நடிகை ஒருவரை தேர்வு செய்து வைத்திருக்கிறாராம். எனவே கூடிய சீக்கிரத்தில் லெஜெண்ட் சரவணனின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் தன்னுடைய இரண்டாவது படம் குறித்து “All Set for #LegendsNext Process Started…. Revealing Soon…” என பதிவிட்டுள்ளார். மேலும், தன்னுடைய சில லேட்டஸ்ட் புகைப்படங்களையும் இதில் பதிவிட்டனர். இதன் மூலம் விரைவில் லெஜென் சரவணன் படத்தின் அறிவிப்பு வெளியாக போகிறது என்பது உறுதியாகி உள்ளது. இந்த படத்தை இயக்கப் போவது யார் இசையமைக்கப் போவது யார் மேலும், நடிகர் நடிகைகள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தாடி, மீசை என முதல் படத்திற்கும் இந்த படத்திற்கும் ஆளே வித்தியாசமாக மாறி உள்ளார். லெஜெண்ட் சரவணனை ஆரம்பத்தில் அவரது தாடி பார்த்துவிட்டு கிராமத்து சப்ஜெக்ட் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காஷ்மீரில் வேற லெவல் ஆக்சன் படத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு பேசுகையில், படத்தின் முயற்சியின் போது நடந்த ஒரு சம்பவத்தை தொகுப்பாளர் சுட்டிக்காட்டிய நிலையில், அது குறித்து செய்யாறு பாலு பேசியுள்ளார். அதாவது, லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ஃபிளாட் முன்பு எப்போதும் ரோல்ஸ் ராய்ஸ் கார் இருக்கும்.
கார் யாருடையது என்று விசாரித்ததில், அந்த கார் லெஜெண்ட் சரவணனின் கார் என்று சொல்லப்பட்டது. அந்த சமயத்தில், சரவணன் தனது முதல் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க அணுகுவதாகவும் செய்திகள் வெளியானது. நயன்தாரா வாங்கிய சம்பளத்தை இரட்டிப்பாக்கி பத்து கோடி அல்லது கொடுப்பதாகவும் பேசப்பட்டது. ஆனால், நயன்தாரா 100 கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கறாராக கூறிவிட்டாராம். அந்த கோபத்தில் பாலிவுட் நடிகையை அழைத்து வந்தார் லெஜன்ட் சரவணன் என செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
விஜய்யின் கடைசி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது…
எம்ஜிஆர்-நம்பியார் நட்பு திரைப்படங்களில் எம்ஜிஆர்க்கு நம்பியார் எப்போதும் வில்லன்தான். அதுவும் இந்த ஹீரோ வில்லன் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த படம்…
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் முரளிதரன் என்பவர்…
கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. சமையல் வேலை செய்யும் இவர், இந்து முன்னணியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.…
கோவிலுக்கு சென்ற இளம்பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை…
இனி AI யுகம்… Artificial Intelligence எனப்படும் AI தொழில்நுட்பம் இனி வரும் காலங்களில் மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை…
This website uses cookies.