ஏத்தி விட்ட ஏணியை மறக்கலாமா?.. தூக்கிவிட்ட பிரபல இயக்குனருக்கு அல்வா கொடுத்த நயன்தாரா..!

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார். முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார். தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே, விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

ஆனாலும், முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இந்தியில் ஜவான் படத்தில் ஷாருக்கனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், தமிழில் அன்னபூரணி திரைப்படத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளாகினார். தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வ்ரும் நயன்தாராவுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்ட்டுள்ளார். மேலும், ஜவான் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை தட்டி சென்றுள்ளார் நயன்தாரா.

இந்நிலையில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படம் தான் நயன்தாராவுக்கு தமிழில் தூக்கிக் கொடுத்த படமாக அமைந்தது. அதை அடுத்து, தொடர்ந்து படங்களில் நடிக்கவும் காரணமாகவும் இருந்தது. அப்படி அறிமுகப்படுத்திய ஹரியை ஒரு கட்டத்தில் நயன்தாரா தூக்கி எறிந்தார் என்று கூறப்படுகிறது. அதாவது, ஐயா படத்தை தொடர்ந்து ஹரி இயக்கி சூப்பர் ஹிட் படமான தாமிரபரணி படத்தில் நயன்தாராவை தான் ஹரி முதலில் நடிக்க கேட்டாராம்.

ஆனால், நயன்தாரா நடிக்க முடியாது என்று தன்னுடைய ஆணவத்தை காட்டியிருந்ததாகவும், அதன் பின்னர் அப்படத்தில் நயன்தாரா லுக்கில் இருக்கும் நடிகை முக்தாவை பானுவை கதாநாயகி கேரக்டரில் இயக்குனர் நடிக்க வைத்ததாகவும், இதன் பின்னர் இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஹரி இயக்கத்தில் நயன்தாரா இதுவே இதுவரை நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

அரசு தீட்டிய திட்டம்.. கைமாறும் 400 ஏக்கர் நிலம் : போராட்டத்தில் குதித்த மாணவர்கள் கைது!

ஹைதராபாத் கச்பவுலி பகுதியில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை ஐடி பார்க்…

1 minute ago

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

15 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

15 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

16 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

16 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

17 hours ago

This website uses cookies.