தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஒரு நடிகையாக இப்படி இருப்பது இது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார்.
பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார். பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்.
அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. தொடர்ந்து இருவரும் தங்களது வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இன்று தவிர்க்கமுடியாத நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் இருந்து வரும் நயன்தாரா பாலிவுட்டில் கூட கால் பதித்துவிட்டார்.
இந்நிலையில் வளர்ந்து வந்த காலத்தில் நயன்தாராவையே சிம்பு பட இயக்குனர் நடிப்பு வரவில்லை என கூறி ரிஜெக்ட் செய்த சம்பவம் தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆம், சிம்பு நடிப்பில் வெளியான தொட்டி ஜெயா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நயன்தாரா தானாம். ஆனால் அப்படத்தின் இயக்குனர் ஆடிஷனில் அவருக்கு நடிப்பே வரவில்லை என கூறி அவரை ரிஜெக்ட் செய்துவிட்டு கோபிகாவை ஒப்பந்தம் செய்தார்களாம்.
அப்படத்தை தயாரித்த கலைப்புலி எஸ். தானு, நயன்தாரா சரத்குமாருடன் நடித்த ஐயா படம் மிகப்பெரிய ஹிட். இப்போ ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்து வருகிறார். அவர் எதிர்காலத்தில் நிச்சயம் மிகப்பெரிய நடிகை ஆவார். என்ன எவ்வளவோ எடுத்து சொல்லியும் இயக்குனர் கேட்கவே இல்லையலாம். இது நயன்தாரா காதிற்கு செல்ல அதன் பின்னர் கடுமையாக உழைத்து நல்ல நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டு பல்வேறு ஹிட் படங்களில் நடித்து இன்று லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.