தென்னிந்திய சினிமாவின் பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்குனர் ஆகவேண்டும் என்ற கனவோடு சினிமாவில் நுழைந்து தனது திறமையை மக்களுக்கு வெளிக்காட்ட மிகவும் கஷ்டப்பட்டு சரியான வாய்ப்புகள் தேடி அலைந்து பின்னர் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக கால் பதித்தார்.
அப்படம் மிகச்சிறப்பாக இருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் கலெக்ஷன்ஸ் அல்லாததால் படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. இருந்தாலும் தொடர்ந்து முயற்சிகள் செய்து அடுத்தடுத்து தனது திறமைகளை நிரூபித்து காட்டினார். திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என சினிமாவில் பல துறைகளில் பணியாற்றுகிறார். பல வகைகளில் திரைப்படங்களை உருவாக்குகிறார்.
நானும் ரௌடி தான் படத்தை இயக்கியபோது நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். இந்நிலையில் இன்று தனது 38 வது பிறந்தநாளை தனது குடும்பத்தினரோடு கொண்டாடும் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா, “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த சிறப்பு நாளில் உங்களைப் பற்றி நிறைய எழுத விரும்புகிறேன், ஆனால் நான் தொடங்கினால், சில விஷயங்களை மட்டும் நிறுத்த முடியாது என்று நினைக்கிறேன் !! என் மீது நீங்கள் பொழிந்த அன்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் !!
எங்கள் உறவுக்கு நீங்கள் வைத்திருக்கும் மரியாதைக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் !! நீங்கள் எனக்கு இருக்கும் எல்லாவற்றிற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.உன்னை போல் யாரும் இல்லை !! என் வாழ்க்கையில் வந்து அதை கனவாகவும், அர்த்தமுள்ளதாகவும், அழகாகவும் மாற்றியதற்கு நன்றி!! நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நீங்கள் சிறந்தவர் !! என் இதயம் மற்றும் ஆன்மாவுடன், வாழ்க்கையில் எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். உங்களின் ஒவ்வொரு கனவும் நனவாகட்டும் கடவுள் உங்களை உலகில் உள்ள எல்லா மகிழ்ச்சியையும் ஆசீர்வதிப்பாராகI LOVE YOU என மிகுந்த காதலோடு அன்பை வெளிப்படுத்தி வாழ்த்து கூறியுள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.