அய்யய்யோ மீண்டும் மீண்டுமா?.. பூகம்பத்தை ஏற்படுத்திய நயன்தாராவின் இன்ஸ்டா பதிவு..!

Author: Vignesh
7 March 2024, 11:46 am

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகையான நயன்தார தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

nayanthara vignesh shivan

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே 9 ஸ்கின் என்ற சருமம் சார்ந்த products தொழில் ஒன்றை ஆரம்பித்தார். சமீபத்தில் femi9 என்ற நேப்கின் கம்பெனி ஒன்றை சொந்தமாக துவங்கி நடத்தி வருகிறார். அந்த பிராண்டின் ப்ரோமோஷன் விழாவில் நயன்தாரா பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார்.

இந்நிலையில், சோசியல் மீடியா பக்கமே தலைகாட்டாமல் இருந்த நயன்தாரா, கடந்தாண்டு இன்ஸ்டாகிராமில் சேர்ந்த சில நாட்களில் 1 மில்லியனுக்கு அதிகமான பாலோவர்கள் அவரை பின் தொடர்ந்தனர். தற்போது, திடீரென தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் UnFollow செய்து நயன்தாரா அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், அவர் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில், ஷேர் செய்துள்ள பதிவில், “எனக்கு இது கிடைத்தது என்று அவள் கண்களில் கண்ணீருடன் என்றென்றும் சொல்வாள்” என்கிற கேப்ஷனும் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்டோரியை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையில் எல்லாம் நல்லா தான போயிட்டு இருக்கு? இல்லை, ரெண்டு பேருக்கும் இடையில் ஏதாவது பிரச்சினையா? ஒருவேளை அந்த ஜோசியர் சொன்னது அதுக்குள்ள ஒர்க் அவுட் ஆயிடுச்சா.. என கேள்வி மேல் கேள்விகளை அடுக்கி வந்தனர்.

இந்நிலையில், அன்பாலோ செய்த விவகாரம் பூதாகரமாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் கணவர் அக்கவுண்டை பாலோ செய்த நயன்தாரா என ரசிகர்கள் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே நயன்தாராவின் பக்கத்தில் சில ஃபாலோயர்களின் பெயர் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆக மொத்தம் விவாகரத்து வதந்திக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

nayanthara - updatenews360.jpg 2

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் உடன் நயன்தாரா இருக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதன் மூலம் விக்னேஷ் சிவன் நயன்தாரா விவகாரத்து சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்நிலையில், மீண்டும் நயன்தாரா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் umm.. I’m lost என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் மீண்டும் இந்த விவகாரத்து சர்ச்சை பரவ தொடங்கிவிட்டது. விவாகரத்து சர்ச்சை குறித்த பதிவா இது அல்லது ஏதாவது படம் அல்லது விளம்பர படம் குறித்த பதிவா என்று ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

nayanthara - updatenews360.jpg 2
  • Vimal shares Kalavani movie experienceநடிகர் விமல் ஓவியாக்கு அண்ணனா…என்னங்க சொல்றீங்க ..பலருக்கு தெரியாத உண்மை தகவல்..!
  • Views: - 212

    0

    0