என் முகத்தை எரித்து கூட பாருங்கள்… நான் அத பண்ணல – நயன்தாரா காட்டம்!

Author:
28 October 2024, 5:07 pm

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்னதாக மலையாளத்தை சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

nayanthara

முன்னதாக இவர் கேரள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு நடிகையாக இன்று முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, தமிழ் , மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.

தற்போது நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் , மூக்குத்தி அம்மன் 2 , ஊர் குருவி, மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதனிடையே நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா ஜவான் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தன்னுடைய மார்க்கெட்டை அதிகரிக்க 12 கோடிக்கு மேல் சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார். இந்த நிலையில் நயன்தாரா குறித்த ஒரு சர்ச்சை குறிய விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .

nayanthara - update news 360

அதாவது, நயன்தாரா தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்து சிலர் அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறார் என விமர்சித்து வந்தனர். அதற்கு பதிலடி கொடுத்திருக்கும் நடிகை நயன்தாரா முக்கிய நிகழ்ச்சி ஒன்று பேசும்போது…

என்னுடைய புருவங்களை நான் அழகுப்படுத்திக் கொள்வேன்.அது என்னுடைய பழக்கமாக இருந்து வருகிறது. என்னுடைய புருவங்களை நிறைய மாதிரி நான் அழகு படுத்தி இருக்கிறேன் அதனால் தான் எனது முகத்தை நான் ஏதோ செய்து விட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அதில் உண்மையே இல்லை. இது வெறும் டயட் தான்.

என்னுடைய உடல் எடையில் நிறைய மாற்றம் அவ்வப்போது ஏற்பட்டு இருக்கிறது. அதே நேரம் என்னுடைய கன்னங்களிலும் மாற்றங்கள் ஏற்படும். என் கன்னத்தை நீங்கள் கிள்ளியும் எரித்தும் கூட பார்க்கலாம் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை என நயன்தாரா அடித்து கூறியிருக்கிறார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 124

    0

    0