அவங்க நடிச்சா நான் நடிக்க மாட்டேன்னு சொன்ன நயன்தாரா: பேட்டியில் பிரபல நடிகை Open Talk..!

Author: Rajesh
12 March 2023, 4:30 pm

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா குறித்து அவ்வப்போது சில விமர்சனங்களை சக நடிகைகள் பேட்டிகளில் பேசி வருகின்றனர்.

சிலது பாசிட்டிவாக இருந்தாலும், சிலது ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியை தரும் விதமாக உள்ளது. அப்படி பிரபல நடிகை கூறியுள்ள தகவல் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பசுபதி, மீனா, வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் குசேலன். அப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா நடித்திருந்தார். Katha Parayumbol என்னும் மலையாள படத்தின் ரீமேக் தான் குசேலன்.

இத்திரைப்படம் குறித்து பலரும் அறியாத விஷயம் என்னவென்றால், இப்படத்தில் நடிக்க மம்தா மோகன்தாஸை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதுகுறித்து பேசிய மம்தா, ‘ஒரிஜினல் படத்தில் என் கதாபாத்திரம் இல்லை. என் கதாபாத்திரத்தை உருவாக்கியதே ரஜினி சார் தான். குசேலன் படத்திற்காக 4, 5 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஆனால் படம் வெளியானபோது அதில் என் காட்சி ஒன்று கூட இல்லை.

வேறு ஒரு ஹீரோயின் டான்ஸ் ஆடினால் நான் நடிக்க மாட்டேன் என குசேலன் பட ஹீரோயின் கூறியதாக பின்னர் நான் கேள்விப்பட்டேன். இப்படி தான் என்னிடம் கூறினார்கள். இன்னொரு நடிகை இருப்பதால் நான் பயப்படவில்லை. அவங்க கேமராவை வைத்தபோதே நான் ஃபிரேமில் இல்லை என்பது தெரியும். 3, 4 நாட்கள் வீணடித்தது தான் மிச்சம். படம் ரிலீஸானபோது என்னுடைய பேக் ஷாட்டில், என் தொப்பியின் நுனி மட்டும் தெரிந்தது. என் முகம் கூட தெரியாது.

அதை பார்த்து தான் அதிருப்தி அடைந்தேன்’ என மம்தா மோகன்தாஸ் தெரிவித்துள்ளார். துபாயில் வேறு ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்த போது, குசேலன் பட வாய்ப்பு கிடைத்ததும் அந்த ஷூட்டிங்கிற்காக கிளம்பி வந்திருக்கிறார். ஒரு படத்தை இயக்கும் இயக்குனர் கதாபாத்திரத்தில் நடிக்கத் தான் மம்தா மோகன்தாஸை அழைத்திருக்கிறார்கள். அப்படியே ஒரு பாடலுக்கு ரஜினியுடன் சேர்ந்து ஆட வேண்டும் என கூறியிருக்கிறார்கள். மம்தா மோகன்தாஸ் நயன்தாராவை பற்றி கூறிய இந்த விஷயம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!