சைக்கோ.. ஏன் டா இப்படி பண்ற?.. கணவரை கண்டமேனிக்கு திட்டிய நயன்தாரா..!
Author: Vignesh25 December 2023, 5:00 pm
குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்.

இதனிடையே, நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது விக்னேஷ் சிவனை நயன்தாரா திட்டி உள்ளார். இது தொடர்பாக, விக்னேஷ் சிவன் முன்பு அளித்த பேட்டி ஒன்றில், பேசுகையில், நானும் ரவுடிதான் படத்தின் பாதி சூட்டிங் சமயத்திலேயே லவ் பண்ண ஆரம்பித்து விட்டோம். அந்த படத்தில், முத்தம் கொடுப்பது போன்று நெருக்கமான காட்சி அமைந்திருக்கும்.

நான் ஏதாவது நினைத்துக் கொள்வேன் என்று அந்த சீன் வரும்போது நயன் இதை மாற்றி அமைக்க வேண்டும் என்றார். ஆனால், நான் பரவாயில்லை. இதில், என்ன இருக்கு இன்னும் கிட்ட கிட்ட என ஷார்ட் சமயத்தில் சொன்னேன். உடனே நயன் என் அருகில் வந்து சைக்கோ ஏன்டா இப்படி பண்ற என கேட்டார் என்று வெளிப்படையாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.