அத பண்ணிட்டு தான் ஷூட்டிங் கிளம்புவேன் – புகைப்படத்துடன் வெளியிட்ட நயன்தாரா!

Author:
12 August 2024, 5:52 pm

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்னதாக மலையாளத்தை சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

முன்னதாக இவர் கேரள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார் .அதன் பிறகு நடிகையாக இன்று முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு. தமிழ் , மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்ப்போது நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் , மூக்குத்தி அம்மன்2 , ஊர் குருவி, மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் .

இந்நிலையில் நயன்தாராவை தனது இன்ஸ்டாகிராமில் “நான் வேலைக்கு கிளம்பும் முன் சில மணிநேர காதல்” எனக் குறிப்பிட்டு தனது மகன்களுடன் சில்லவுட் செய்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் வைத்திருக்கிறார்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!