நயன்தாரா இனி தமிழ் படங்களில் நடிக்கக்கூடாது… ரஜினி, விஜய்க்கு கண்டீஷன் – அவருக்கு மட்டும் தாராளமா?

Author: Shree
29 August 2023, 4:35 pm

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்திருக்கும் நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் முதன் முறையாக அறிமுகமாகவிருக்கிறார். இதன் மூலம் அவருக்கு பாலிவுட்டில் ஒரு நல்ல ஸ்கோப் கிடைக்கும் எதிர்பார்க்கலாம். இது பாலிவுட்டின் அறிமுக படம் என்பதால் அவர்கள் கேட்கும்படியெல்லாம் நடித்து கொடுக்கிறாராம்.

குறிப்பாக ரொமான்ஸில் தாராளம் காட்டி நடித்துள்ளார். ஓவர், நெருக்கம் , எல்லை மீறிய ரொமான்ஸ் என ஜவான் படத்தில் ஷாருக்கான் உடன் நடித்துள்ள பாடல் ஒன்று வெளியாகி செம ஷாக் கொடுத்தது. இதுவரை தமிழ் ஹீரோக்களுடன் கூட அப்படி ஒரு நெருக்கம் காட்டவில்லை என்றால் பாருங்க. எல்லாத்துக்கும் காரணம் பாலிவுட்டில் மார்க்கெட் பிடிக்க தானாம். இதனால் கோலிவுட் ரசிகர்கள் செம கடுப்பாகியுள்ளாராம். அஜித், விஜய், ரஜினிக்கெல்லாம் கண்டீஷன் போட்டு நடித்த நயன்தாரா ஷாருக்கான் உடன் படுநெருக்கமாக நடித்திருப்பது நல்லதல்ல என கொந்தளித்துள்ளனர்.

அதுமட்டும் அல்லாமல் தான் பல வருடங்களாக கடைபிடித்து வந்த தனது கொள்கையை ஜவான் படத்தில் தகர்த்தெறிந்துள்ளாராம். இப்படத்தை மிகப்பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்ய திட்டமிட்டிருக்கும் படக்குழு இதில் நயன்தாராவையும் கலந்துக்கொள்ள சம்மதம் வங்கியுள்ளார்களாம். ஷாருக்கான் தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ என்பதால் நயன்தாராவும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறாராம். பாலிவுட்டில் நல்ல ஸ்ட்ராங்கான இடத்தை பிடிக்க திட்டமிட்டு தான் இதற்கெல்லாம் ஓகே சொல்லியுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

இப்படி செய்தால் பாலிவுட்டிலும் லேடி சூப்பர் ஸ்டார் ஆகிவிடலாம் என பக்காவாக பிளான் போட்டுவிட்டாராம். இதை கேட்டு செம காண்டாகிவிட்டதாம் கோலிவுட். ரஜினி, விஜய் போன்ற தமிழ் படங்களின் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ளாத போது பாலிவுட் மார்க்கெட்டுக்காக நயன்தாரா தனது கொள்கையை மாற்றி இருப்பதை பலர் கலாய்த்து வருவதோடு அவருக்கு இனி தமிழ் படங்களில் வாய்ப்பு கொடுக்காதீர்கள் என கோலிவுட் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1875

    24

    11