“முட்டாள்களுடன் விவாதம் செய்யாதே” – செம்பருத்தி டீ சர்ச்சைக்கு நயன்தாரா பதிலடி!

Author:
30 July 2024, 9:01 am

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருந்து வரும் நடிகை நயன்தாரா செம்பருத்தி டீயை தான் தினமும் குடித்து வருவதாக கூறி அது குறித்த மருத்துவ பயன்களை தனது instagram-ல் பதிவிட்டார்.

அதாவது சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவர்களுக்கு செம்பருத்தி டீ மிகவும் நல்லது என பதிவிட்டிருந்தார். இந்த பதிவுதான் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான விஷயமாக தற்போது மாறியிருக்கிறது. ஆம், நயன்தாராவின் இந்த பதிவிற்கு டாக்டர் பிலிப்ஸ் என்ற கல்லீரல் மருத்துவர் தனது எக்ஸ் தளத்தில் … நயன்தாரா செம்பருத்தி டீ குடிப்பதற்கு ருசியானது என்பதோடு நிறுத்திக் கொண்டால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால், அதோடு நிறுத்தாமல் செம்பருத்தி டீ யின் மருத்துவ குணங்களைப் பற்றி பேசி தனது அறிவின்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். செம்பருத்தியின் மருத்துவ குணங்கள் என்று நயன்தாரா குறிப்பிட்டவை எதுவுமே நிரூபிக்கப்படாத உண்மை. நயன்தாரா இந்த பதிவை அவரது ஊட்டச்சத்து நிபுணரை பிரமோட் செய்யும் நோக்கத்திற்காகவே பதிவிட்டு இருக்கிறார்.

செம்பருத்தி டீ தினமும் குடிப்பதால் ஆண் மற்றும் பெண் இருவருக்குமே நிறைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே நயன்தாரா போலியான இந்த பதிவை பதிவிட்டதன் மூலம் பல பேர் இதனால் பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமில்லாமல் சமந்தாவை போலவே நயன்தாராவும் தன்னுடைய ஃபாலோவர்களை தவறான வழியில் நடத்துகிறார் என பதிவிட்டு இருந்தார்.

இதையடுத்து நயன்தாரா தான் போட்ட செம்பருத்தி டீ குறித்த மருத்துவ பயன்களுக்கான அந்த பதிவை அதிரடியாக நீக்கினார். இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான விஷயமாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்ததை அடுத்து தற்போது நயன்தாரா அந்த மருத்துவருக்கு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்ல்
பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதில் அவர் பதிவிட்டு இருப்பதாவது, முட்டாள்களுடன் ஒருபோதும் விவாதம் செய்யாதீர்கள்… அவர்கள் உங்களை மட்டமான மனநிலைக்கு இழுத்துச் சென்று விடுவார்கள் .அவர்களின் அனுபவத்தால் உங்களை தோற்கடித்து விடுவார்கள் என கடும் கோபமாக பதிவிட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் செம்பருத்தி டீ எப்படி செய்ய வேண்டும்? என அந்த மருத்துவருக்கு புதிதாக ஒரு பதிவையும் போட்டு தரமான பதிலடி கொடுத்திருக்கிறார் நயன்தாரா.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 286

    0

    0