Thanks அண்ணா சொல்லி கொடு… வேலையாட்களுக்கு “போனஸ்” கொடுத்த நயன்தாரா மகன்கள் – வீடியோ!

Author:
14 October 2024, 1:09 pm

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்னதாக மலையாளத்தை சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

முன்னதாக இவர் கேரள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு நடிகையாக இன்று முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, தமிழ் , மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.

nayanthara

தற்போது நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் , மூக்குத்தி அம்மன் 2 , ஊர் குருவி, மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதனிடையே நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது வீட்டில் வேலை செய்யும் வேலை ஆட்களுக்கு ஆயுத பூஜை தினத்தில் சிறப்பு பொருள்களுடன் போனஸ் வழங்கியிருக்கிறார். அப்போது தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை மகன்களை தூக்கி வைத்துக்கொண்டு தன்னுடைய மகன்களின் கையால் வேலையாட்களுக்கு போனஸ் வழங்கினார்.

nayanthara

இதையும் படியுங்கள்:ஆபாச வீடியோ லீக்… நீங்க Shut Up பண்ணுங்க – ஓவியாவின் தில்லான பதில்!

அப்போது அண்ணனுக்கு தேங்க்ஸ் என்று சொல்லிக் கொடு… அக்காவுக்கு தேங்க்ஸ் என்று சொல்லிக் கொடு என்றும் இரண்டு கையால கொடுப்பா என்று பிள்ளைகளுக்கு மரியாதையுடன் சொல்லிக் கொடுத்து இருவரும் போனஸ் வழங்கினார்கள். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் பிள்ளைகளை இப்படித்தான் வளர்க்கணும் நயன்தாராவுக்கு வாழ்த்துக்கள் என கூறி இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!