கலைக்கும், காதலுக்கும் நன்றி… விருது மேடையில் தமிழ் பேசி அசத்திய நயன்தாரா – வீடியோ!

Author: Rajesh
23 February 2024, 6:03 pm

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

nayanthara - updatenews360.jpg 2

தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

ஆனாலும், முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இந்தியில் ஜவான் படத்தில் ஷாருக்கனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் , தமிழில் அன்னபூரணி திரைப்படத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளாகினார். தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வ்ரும் நயன்தாராவுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்ட்டுள்ளார். . மேலும், ஜவான் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை தட்டி சென்றுள்ளார் நயன்தாரா.

அதன் புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு ” தாதாசாகேப் பால்கே விருது கொடுத்து கௌரவத்திற்கு பணிவான நன்றி” என கேப்ஷன் கொடுத்திருந்தார் நயன்தாரா.இந்நிலையில் தாதாசாகேப் விருது மேடையில் நயன்தாரா தமிழ் பேசி அசத்தியுள்ளார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, ” கலைக்கும் காதலுக்கும் நன்றி…….அன்புக்கும் ஆண்டவனுக்கும் நன்றி” என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 239

    0

    0